வீடு விற்பனையில் சேவையின் தரம் உயரும் !

மத்திய அரசு நிறைவேற்றி உள்ள ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், வீடு, மனை விற்பனையில் நிறுவனங் களின் சேவை தரத்தை மேம்படுத்த உதவும்' என, சென்னை ரியல் எஸ்டேட் முகவர்கள் சங்கம் சார்பில், சென்னையில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்றோர் தெரிவித்தனர்.

இந்த சங்கத்தின், 17வது ஆண்டு விழா மற்றும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி, சென்னையில், நேற்று முன்தினம் நடந்தது.
சென்னை ரியல் எஸ்டேட் முகவர்கள் சங்கத்தின் தலைவர் அமித் தாமோதர், இந்திய ரியல் எஸ்டேட் சங்கத்தின் தலைவர் விஜயசாரதி, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'கிரெடாய்' சென்னை பிரிவு நிர்வாகிகள் அஜித் சோர்டியா, சுரேஷ் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்:
 ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், இத்துறையின் வர்த்தக செயல்பாடுகளை மேலும் நவீனப்படுத்த உதவும்
 நாடு முழுவதும், 20 ஆயிரம் ரியல் எஸ்டேட் முகவர்கள் உள்ளனர்.
'கட்டுமான நிறுவனங்களை போல் முகவர்களும், ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்' என, இந்த சட்டத்தில் விதிகள் வகுக்கப்பட்டு உள்ளன
 மத்திய அரசின் புதிய சட்டத்தின் விதிமுறைகளின் படி, ஒவ்வொரு 'ரியல் எஸ்டேட்' நிறுவனமும் தங்கள் திட்டங்கள் குறித்த விவங்களை, இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்பதால், 'ஆன்லைன்' முறையில் அனைத்து தகவல்களும் மக்களுக்கு எளிதாக கிடைத்துவிடும்
 மேலும், தரகு நிறுவனங்களின் பணிகளும், 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட வழி ஏற்பட்டு உள்ளது. இதனால், வீடு, மனை வாங்குவோருக்கு, நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கும் சேவை மேம்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...