பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வினை மே மாதத்திற்கு தள்ளி வைக்க வேண் டும் என, மாணவர் மற்றும் பெற்றோர் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சங்க தலைவர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரியில் மே 20ம் தேதி நடைபெற
வேண்டிய பொறியியல் கல்லுாரிக்கான செமஸ்டர் தேர்வினை தற்போது ஏப்ரல் 26 ம் தேதி முதல் நடைபெறும் என, புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது பின்தங்கிய தாழ்த்தப்பட்ட சமுதாய மாணவர்களை வஞ்சிக்கும் செயலாகும்.
மேலும் இத்தேர்வினை இறுதியாண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு படிக் கும் பொறியியல் மாணவர்கள் செய்முறை தேர்விற்கு முன்பே எழுத்துத் தேர்வை வைப்பது நடைமுறை சிக்கலாகும்.
இறுதியாண்டு மாணவர்கள் கடைசி கட்ட 8வது செமஸ்டர் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு கல்லுாரி நிர்வாகம் போதிய கால அவகாசத்தை கொடுத்து அனைத்து பாடப்பிரிவிகளிலும் நன்கு பயிற்சி அளித்திருக்க வேண்டும்.
எனவே, புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்கனவே திட்டமிட்டது போல் பொறியியல் கல்லுாரிக்கான தேர்வினை மே மாத இறுதியில் நடத்த வேண்டும்.