திறந்தவெளியில் மலம் கழிப்பதற்கு எதிராக, பெரும் போரையே துவங்கியுள்ளன, உத்தர பிரதேச மாவட்டநிர்வாகங்கள். இங்கு, திறந்தவெளியில் மலம் கழிப்பவர்களுக்கு, சிறை தண்டனை,
அபராதத்துடன், அவர்களுக்கு மாலை அணிவித்து, புகைப்படம் எடுத்து, 'வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களில் வெளியிட்டு அசிங்கப்படுத்தவும் களமிறங்கியுள்ளன.
'நாட்டின் மக்கள் தொகையில், 70 சதவீதம் பேர் கிராமங்களில் வாழ்கின்றனர். இவர்களில், 55 கோடி பேர், திறந்தவெளிகளிலேயே மலம் கழிக்கின்றனர்' என, ஆய்வில் தெரியவந்துள்ளது.
கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் தான் இப்படி என்று இல்லாமல், நகர்ப்புறங்களைச் சேர்ந்த, 13 சதவீதம் பேரும், திறந்த வெளிகளிலேயே, காலைக் கடன்களை முடிக்கின்றனர்.
பல்வேறு சுகாதார சீர்கேடுகளுக்கு காரணமாக இருக்கும் இந்த செயலுக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஏப்., 15க்குள்...பிரதமர் மோடி, 2014 ஆகஸ்டில், தன் முதல் சுதந்திர தின உரையில், நாட்டில் திறந்தவெளியில் மலம் கழிப்பதை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அத்துடன், நாடு முழுவதும், 10 கோடி கழிப்பறைகள் கட்டும் திட்டம் குறித்தும் அறிவித்தார்.
மத்திய அரசு, இப்படி பல நடவடிக்கைகளை எடுத்த போதும், வட மாநிலங்களில் இன்னும் இந்த சீர்கேடு தொடரத் தான் செய்கிறது. குறிப்பாக, மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில், திறந்தவெளியில் மலம் கழிப்பது சர்வ சாதாரண நிகழ்வாகவே உள்ளது.
இதனால், ஏப்., 15க்கு பின், மாநிலத் தில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நடைமுறை இல்லை என்ற இலக்கை எட்ட தீவிரமாக
நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன, உ.பி., மாவட்ட நிர்வாகங்கள்.
தர்மசங்கடம் வரும்:இதற்காக, திறந்தவெளியில் மலம் கழிப்பவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில், அவர்களுக்கு மாலை அணிவித்து, அதை புகைப்படமாக எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிடுவது; காலை மற்றும் மாலை நேரங்களில் திறந்தவெளி களில் அதிகாரிகளை ரோந்து பணிக்கு அனுப்புவது போன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.
இருப்பினும், இக்குற்றச்செயலில் தொடர்ந்து ஈடுபடுபவர்களை சிறையில் அடைக்கவும்; 250 முதல், 2,500 ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்து உள்ளன.
கர்நாடகாவில், திறந்தவெளியில் மலம் கழிப்பவர்களுக்கு, மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்க சட்டம் இயற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
'வாட்ஸ் ஆப்'பில் மானம் கப்பலேறும்!: ஆக்ரா மாவட்டத்தில், திறந்தவெளியில் மலம் கழிப்பவர்களுக்கு மாலை அணிவித்து, அவர்களை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கவும்;அடுத்தடுத்து இக்குற்றச்செயலில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனையும், 250 முதல், 2,500 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
மதுராவில், திறந்தவெளியில் மலம் கழிப்பவர்களுக்கு மாலை அணிவித்து, புகைப்படம் எடுத்து, அதை, 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளத்தில் வெளியிட்டு, அவர்களை அசிங்கப்படுத்தவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்
கான்பூரில், செம்புடன் திறந்தவெளிக்கு செல்பவர்களை மணியடித்து, அலற வைக்க அதிகாரிகள் திட்டமிட்டுஉள்ளனர் ஷாஜகான் பூரில், திறந்தவெளிக்கு செல்பவர்களைப் பார்த்ததும், விசில் அடித்து, அவர்களை அலறடிக்கச் செய்ய உள்ளனர்.
கழிப்பறை கட்டினால் ரூ.12,000 நிச்சயம்!: திறந்தவெளியில் காலைக் கடன்களை முடிப்பது, சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்துவது ஒரு புறம் இருந்தாலும்,இன்னொரு பக்கம், இந்த பகுதிகளில், பெண்களுக்கு எதிராக, பாலியல் தாக்குதல்களும் நடக்கின்றன.
இதைத் தடுக்க, வீடுகளில் கழிப்பறைகள் கட்ட வேண்டும் என, தேசிய அளவில் பிரசாரம் செய்யப்படுகிறது. மணமகன் வீட்டில் கழிப்பறை இல்லாததால், புகுந்தவீட்டுக்குச் செல்ல, மணப்பெண்கள் மறுத்த சம்பவங்களும் நாட்டில் அரங்கேறியுள்ளன.
இதனால், உ.பி.,யில், கழிப்பறைகள் கட்டுவதை ஊக்குவிக்க, புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கழிப்பறைகள் கட்டி முடித்து, அதை அதிகாரிகளிடம் காட்டினால் போதும், மாநில அரசின் உதவித்தொகை, 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.