வாகன விபத்து வழக்குகளில், சிக்கல் இல்லாமல் இழப்பீடு பெற ஏதுவாக, சென்னை உயர் நீதிமன்றம், வழிமுறைகளை பிறப்பித்துள்ளது. ஆகஸ்ட் முதல், கண்டிப்புடன் அமல்படுத்தவும் உத்தரவிட்டு உள்ளது.புதுச்சேரி, மாஹேவில் உள்ள இளையவூரில், ராஜேஷ் என்பவர், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தார். ஜீப் மோதியதில், அவர் படுகாயமடைந்தார். கண்ணுார்
போலீசார், வழக்கு பதிவு செய்தனர். 2011 செப்டம்பரில், சம்பவம் நடந்தது.
இழப்பீடு கோரிய வழக்கை, மாஹேயில் உள்ள தீர்ப்பாயம் விசாரித்தது. 64.86 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம், மேல்முறையீடு செய்தது.
மனுவை, நீதிபதிகள் சுதாகர், வைத்தியநாதன் அடங்கிய, 'டிவி ஷன் பெஞ்ச்' விசாரித்தது. நிறுவனம் சார்பில், வழக்கறிஞர் என்.விஜயராகவன் ஆஜரானார். இழப்பீடு தொகையை, 57.28 லட்சம் ரூபாயாக குறைத்து, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டது.
இந்த வழக்கில், நீதிபதி சுதாகர் தனியாக உத்தரவு பிறப்பித்து உள்ளார். இழப்பீடு தொகையை, பாதிக்கப்பட்டவர்கள் பெறுவதில் ஏற்படும் கஷ்டங்களை கருத்தில் கொண்டு, வழிமுறைகளை வகுத்துள்ளார். நீதிபதி சுதாகர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவால், பாதிக்கப்பட்டவர்களின் கைகளில் இழப்பீடு சேர வேண்டும். இழப்பீடு தொகை, அவர்களுக்கு போய் சேரவில்லை என்றால், அதை தோல்வியாகவே கருத முடியும்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர், கல்வி அறிவு இல்லாதவர்கள். கால தாமதமாகும் இழப்பீட்டால், அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி, அவர்களுக்கு முழுமையான இழப்பீடு கிடைப்பதை உறுதி செய்ய, தீர்ப்பாயங்களுக்கு சில உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டி உள்ளது.
* இழப்பீடு கோருபவர்களிடம், அவர்களின் முகவரி, வங்கி பெயர், கிளை, வங்கிக் கணக்கு எண், வங்கி பாஸ்புக் முதல் பக்க நகல், பான் கார்டு ஆகிய விவரங்களை, தீர்ப்பாயம் பெற வேண்டும். பான் கார்டு இல்லை என்றால், அதை பெறுவதற்கு ஆலோசனை கூற வேண்டும். ஆதார் அட்டையின் நகலை பெற்று, சரிபார்த்து வைத்து கொள்ளலாம்
* இழப்பீடு தொகையை, தீர்ப்பாயத்தின் வங்கிக் கணக்கில் நேரடியாக, 'டிபாசிட்' செய்யும்படி, காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து கழகங்களுக்கு, தீர்ப்பாயங்கள் உத்தரவிட வேண்டும். தீர்ப்பாயங்கள் அல்லது மாவட்ட நீதிமன்றங்கள், இதற்காக தனி கணக்கு துவங்கும்படி, பதிவுத் துறை தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்
* தீர்ப்பாயம் கணக்கு வைத்துள்ள வங்கி, தினசரி, தீர்ப்பாயத்தின் பதிவு துறைக்கு, கணக்கு விவரங்களை அளிக்க வேண்டும்
* பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகையை வழங்கும்படி, தீர்ப்பாயங்கள் உத்தரவிட்ட பின், வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக, பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்குக்கு, கிரெடிட் செய்யப்படுகிறதா என்பதை, உறுதி செய்ய வேண்டும். இந்த உத்தரவின் அடிப்படையில், மாவட்ட நீதிபதிகளுக்கும், தீர்ப்பாயங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப, தலைமை நீதிபதியின் பார்வைக்கு, பதிவுத் துறை வைக்க வேண்டும். உத்தரவை, மாவட்ட நீதிபதிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். நடைமுறை சிக்கல் இருந்தால், உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரலாம்.
ஆக., 1ம் தேதி முதல், இந்த உத்தரவு அமலுக்கு வர வேண்டும். இந்த நடைமுறை அமலாக்கத்துக்கு பின், நில ஆர்ஜிதம், வாடகை கட்டுப்பாடு, குடும்பநல வழக்குகளிலும் பின்பற்றலாம்.