நீதித்துறை மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது ,உச்சநீதிமன்ற நீதிபதி கண்ணீர் !!!

கோர்ட்டுகளில் நீதிபதி எண்ணிக்கை குறைவாக இருப்பதால் வழக்குகள் பெரும் அளவில் தேங்கி கிடப்பதாகவும் இதற்கேற்ப நீதிபதிகள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் எனவும், இதனால் நீதித்துறை மீதான நம்பிக்கை குறைந்து வருவதாகவும் டில்லியில் நடந்த மாநில முதல்வர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் பங்கேற்ற கூட்டத்தில் பேசுகையில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார்.





பிரதமர் மோடி பங்கேற்ற இந்த கூட்டத்தில் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் பேசியதாவது: நாட்டின் வளர்ச்சிக்காக , நான் இந்த தருணத்தில் நான் கெஞ்சிக்கேட்கிறேன், நீதித்துறையை விமர்சிக்காதீர்கள். ஒட்டுமொத்த சுமையையும் நீதித்துறை மீது சுமத்தாதீர்கள். மற்ற நாட்டு நீதிபதிகளுடன் ஒப்பிடுகையில், நம் நாட்டு நீதிபதிகள் கடினமாக உழைக்கிறார்கள். அவர்களை காட்டிலும் உயர்ந்து நிற்கிறார்கள்.



கடந்த 1987 ம் ஆண்டு முதல், சட்ட கமிஷன், நீதிபதிகளின் எண்ணிக்கையை அறிவிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. 10 லட்சத்திற்கு 10 நீதிபதிகள் என்ற எண்ணிக்கையை, 50 ஆக உயர்த்த வேண்டும் என கூறியுள்ளது. இது தொடர்பாக பேசப்படுகிறது. பார்லிமென்டிலும் விவாதிக்கப்படுகிறது. மக்கள் பேசுகிறார்கள். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. சரி எனக்கூறும், மத்திய அரசு இதற்கான நடவடிக்கைகளை மாநில அரசுகள் தான் துவக்க வேண்டும் என கூறுகிறது. இதனால், ஏற்பட்ட சர்ச்சை நீண்டு கொண்டே செல்கிறது. எப்டிஐ., மேக் இன் இந்தியா என பிரதமர் விரும்புகிறார். அது போல் நீதிபதிகள் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என்பதும் முக்கியம் . இவ்வாறு பேசும் போது நீதிபதி உணர்ச்சியுடன் காணப்பட்டார்.



கோர்ட்களில் தேங்கியுள்ள லட்சக்கணக்கான வழக்குகளை தீர்க்க, தற்போதுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கையை 21 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரமாக உயர்த்த வேண்டும் இவ்வாறு நீதிபதி தாக்கூர் பேசினார்.



பிரதமர் உறுதிமொழி: இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி ; நீதித்துறை பிரச்னைகளை தீர்ப்பதில் தனது அரசு உறுதியாக உள்ளது எனவும், இது தொடர்பாக ஆலோசனை நடத்தி தீர்வு காண்பேன் எனக்கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...