பள்ளியின் இந்த ஆண்டிற்கான
ஆண்டுவிழா ஐம்பெரும் விழாவாக சிறப்பாக நடைபெற்றது. முதல் நாளில் கலைப்பொருட்கள் கண்காட்சியும் இரண்டாவது நாள் அறிவியல் கண்காட்சியும் விமரிசையாக நடைபெற்றது. மாணவர்கள் தங்களது படைப்புகளை பார்வையாளர்களுக்கு விளக்கினார்கள்.
மூன்றாவது நாள் உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது. நமது பாரம்பரிய உணவு வகைகள் மாணவர்களால் படைக்கப்பட்டது. பார்வையாளர்களுக்கும் பிற
மாணாக்கர்களுக்கும் ருசியான உணவு வழங்கப்பட்டது. நான்காம் நாளான இன்று (01.4.2016) காலையில் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. மாணவர்களின் விளையாட்டு ஆர்வமும் தன்னம்பிக்கையும் வெளிப்படையாக தெரிந்தது. மாலையில் ஐம்பெரும் விழாவின் முக்கிய அம்சமான ஆண்டுவிழா அட்டகாசமாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பள்ளியில் முதல் பேட்ச் மாணவர்கள் (தற்போது பல்வேறு பணிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்று அலுவலர்கள் ), உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு. தேவேந்திரன், அனைவருக்கும் கல்வி இயக்கம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் திருமதி.வினிதா சோபியா மற்றும் பல முக்கிய சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு ஆண்டுவிழாவினை அசத்தல் விழாவாக மாற்றினார்கள். ஒன்றியத்தின் பல பள்ளியில் இருந்தும் தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டார்கள். சிறப்பு விருந்தினர்கள், விருந்தினர்கள், ஊர் பிரமுகர்கள், நன்கொடையாளர்கள், அனைத்து ஆசிரியர்களுக்கும் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். நான்கு நாட்கள் நடைபெற்ற பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பரதநாட்டியம், பல பாரம்பரிய நடனங்கள்,
தமிழ் மற்றும் ஆங்கில நாடகங்கள், பாடல்கள், பேச்சுமன்றம், விவாதமேடை, ஜோக்குகள் போன்ற பல்சுவை கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் பார்வையாளர்களையும் பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்தது. ஐம்பெரும் விழாவின் நிகழ்ச்சிகளை SMC, PTA , VEC உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள், சுய உதவிக்குழு பெண்கள், இளைஞர் படையினர் உதவியோடு பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. வீ.சந்தியா, பட்டதாரி ஆசிரியர்கள் திரு.அசோக்குமார், திரு.தனசேகரன் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் திரு.பொன். பிரவீன் குமார், திரு. மாரிதுரை, திரு.ராஜ்குமார் சிறப்பாக ஒருங்கிணைத்து ஐம்பெரும் விழாவினை ஐயமின்றி அனைவரும் அசத்தல் விழாவென போற்றுமாறு நடத்தி காட்டினார்கள். .
நமது அரசு பள்ளி எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தது இல்லை என நிருபித்து காட்டியுள்ளார்கள். ஆசிரியர்களுக்கு மனதார வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் உரிதாக்கிக் கொள்கிறேன்.