செல்லிடப்பேசி நிறுவனங்களுடன் லக்கானி இன்று ஆலோசனை !

செல்லிடப்பேசி நிறுவனங்களுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்துகிறார்
. இந்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.
                  பணமாக இல்லாமல்,
செல்லிடப்பேசிக்கு ரீ-சார்ஜ் செய்வது போன்றவற்றின் மூலம் வாக்காளர்களை அரசியல் கட்சியினர் கவர்வதாக புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து செல்லிடப்பேசி சேவை வழங்கும் நிறுவனங்களுடன் ராஜேஷ் லக்கானி ஆலோசனை நடத்துகிறார்.
                  இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தனியார் செல்லிடப்பேசி நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். கடந்த மாதத்துக்கும், இந்த மாதத்துக்கும் எந்தெந்த செல்லிடப்பேசி முகவர்கள் அதிகளவு ரீ-சார்ஜ் செய்கிறார்கள் என்ற விவரங்களை இந்தக் கூட்டத்தில் ராஜேஷ் லக்கானி வலியுறுத்தி உள்ளார். மேலும், மிகையளவு பணத்துக்கு அதிகம் பேருக்கு ரீ-சார்ஜ் செய்தாலும் அதுகுறித்து தகவல் தெரிவிக்கவும் தனியார் செல்லிடப்பேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட உள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...