எம்.பில் மற்றும் பி.எச்டி படிப்பு பெண்கள், ஊனமுற்றோருக்கு கூடுதல் கால அவகாசம் !

எம்பில், பி.எச்.டி படிக்கும் பெண்கள் மற்றும் ஊனமுற்றோருக்கு கல்வி கற்கும் காலத்தை அதிகரித்து பல்கலைக்கழக மானியக்குழு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் எம்பில் மற்றும் பிஎச்டி ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்க நடவடிக்கை
எடுக்கப்படும் என்று கடந்த வாரம் மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்திருந்தார். இதை பரிசீலனை செய்த பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி), இந்த 2 மேற்படிப்பு படிக்கும் மாணவிகள் மற்றும் ஊனமுற்றோருக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதன்படி எம்பில் படிப்பில் சேர்ந்துள்ள பெண்கள் மற்றும் 40 சதவீதம் அளவுக்கு ஊனமுற்ற மாணவர்கள் தங்களது படிப்பை நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக ஒரு ஆண்டில் முடிக்கலாம்.


இதேபோல் பிஎச்டி படிக்கும் பெண்கள், ஊனமுற்றோர் தங்களது ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பிக்க கூடுதலாக 2 ஆண்டு வழங்கப்படுகிறது. இது தவிர இந்த 2 மேற்படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவிகளுக்கு பேறுகால விடுப்பு மற்றும் குழந்தை பராமரிப்பு விடுப்பு என மொத்தம் 240 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும்.இது தவிர திருமணம் உள்ளிட்ட சம்பவங்கள் காரணமாக வேறு இடத்திற்கு மாறும் பெண்கள் தங்கள் படிப்பை அங்குள்ள பல்கலைக்கழகத்திலும் மாற்றிக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 11ம் தேதிக்கு முன் எம்பில் மற்றும் பிஎச்டி படிப்பில் சேர்ந்தவர்கள், பேராசிரியர் பணிக்கு சேரும்போது செலட் மற்றும் நெட் தேர்வில் தேறியிருக்க வேண்டும் என்ற விதிமுறையும் தளர்த்தப்படுகிறது. அதேபோல் பிஎச்டி ஆராய்ச்சி படிப்பை படிக்கும் மாணவர்களின் ஆய்வுக்கட்டுரையை வேறுகல்லூரிகளை சேர்ந்த 2 பேராசிரியர்கள் ஆய்வு செய்வார்கள் எனவும் யுஜிசி உத்தரவில் தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...