காந்திகிராம பல்கலையில் பயின்ற எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களின் கல்விக் கட்டணத்தை திரும்ப ஒப்படைக்க' சென்னை கல்லுாரி கல்வி இயக்குனரகம் ஒப்புதல் வழங்கியுள்ளது என துணைவேந்தர் நடராஜன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: பல்கலையில் 2006 -- 07 முதல் 2013 -- 14 கல்வி ஆண்டு வரை பயின்ற அனைத்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும்
மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவருக்கான கல்விக் கட்டணத்தைத் திரும்ப வழங்க கல்லுாரி கல்வி இயக்குனரகம் ஒப்புதல் வழங்கிஉள்ளது.
இதற்கான நிதி ரூ.56 லட்சத்து 94 ஆயிரத்து 400 பெறப்பட்டுள்ளது. இக்கல்வியாண்டுகளில் பயின்ற அனைத்து எஸ்.சி., எஸ்.டி., பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ
ஆதிதிராவிட மாணவ மாணவியர் உட்பட 4,194 பேருக்கு கல்வி
கட்டணத் தொகை மாணவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும்.
மாணவர்கள் தங்களது கல்வி கட்டணத்தை திரும்ப பெற பல்கலை இணையத்தளத்தில் (www.ruraluniv.ac.in) விண்ணப்பிக்கலாம், என்றார்.