14.05.2016 அன்றுமாலை 6.00 மணி முதல் 16.05.2016 வாக்குப் பதிவுகள்முடிவடையும் வரை தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் !!!

பொது (தேர்தல்கள்-3)த்துறை
செய்திவெளியீடு எண்: 219 நாள் : 11.05.2016
                                                                  2016 ஆம் ஆண்டு தமிழ்நாடுசட்டமன்றப்பொதுத் தேர்தல்கள், 16.05.2016 (திங்கட்கிழமை) அன்றுகாலை 7.00 மணிமுதல்மாலை 6.00 மணிவரைநடைபெறும். 14.05.2016 அன்றுமாலை 6.00 மணிமுதல்வாக்குப் பதிவுகள்முடிவடையும்


வரையில்1951ஆம்ஆண்டு மக்கள்பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126-ன் கீழ், பின்வரும் விதிமுறைகள்செயலில் இருக்கும்:-


💥(1) தேர்தல்தொடர்பானயாதொருபொதுக் கூட்டத்தையோ ஊர்வலத்தையோயாரும் ஒருங்கிணைக்கவோ,
நடத்தவோஅல்லது
அவற்றில் பங்கேற்கவோகூடாது.


💥(2)
யாதொருதேர்தல்
விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், டிவிட்டர் போன்றஅல்லது இது போன்றசாதனம் வாயிலாகப் பொதுமக்களின் பார்வைக்குவைக்கக் கூடாது.  குறுஞ்செய்திமற்றும் இணையம் உட்படஅனைத்துமின்னணுவடிவிலானதகவல்தொடர்பையும் இது உள்ளடக்கும்.


💥(3)
பொதுமக்களில்எந்த
வொருநபரையும் ஈர்க்கிற வகையில், யாதொருஇசைநிகழ்ச்சி
அல்லது யாதொருதிரையரங்கச் செயல்பாடுஅல்லது எவ்விதஏதேனும் பிறகேளிக்கைஅல்லது பொழுதுபோக்குநிகழ்ச்சியைநடத்தஅல்லதுஏற்பாடுசெய்வதன் மூலம் அங்குள்ளபொதுமக்களிடம் யாதொரு தேர்தல்விவகாரத்தையும் யாதொருநபரும் பரப்புரைசெய்யக் கூடாது.

 இந்தவிதிமுறைமற்றும் மேற்கண்டஇரண்டு விதிமுறைகள்எவ்விதத்தல்மீறப்பட்டாலும் 1951 ஆம் ஆண்டு மக்கள்பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126 (2)-ன்படி, 2 ஆண்டுகள்சிறைஅல்லது
அபராதம்அல்லது
இவையிரண்டும் சேர்த்து தண்டனையாக
விதிக்கப்படும்.


💥(4) தொகுதிவெளியேயிருந்துஅழைத்துவரப்பட்ட
அனைத்து அரசியல்கட்சிநிர்வாகிகள், கட்சிப்பணியாளர்கள் முதலியோர் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள்அல்லாதோர் 14.05.2016 அன்றுமாலை 6.00 மணிக்குமேல்அந்தத் தொகுதியைவிட்டு வெளியேறவேண்டும்.


💥(5)
கல்யாணமண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகியஇடங்களில் வெளியாட்கள்யாரேனும் தங்கியுள்ளனரா
என்பதைகண்டறியப்படும்.


💥(6)
வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திரபேச்சாளர்கள்
உட்படவாகனஅனுமதிகள், 14.05.2016 அன்றுமாலை 6.00 மணிமுதல்
செயல்திறனற்றதாகி விடும்.


💥(7)
வாக்குப்பதிவுநாளன்று ஒவ்வொருவேட்பாளரும் பின்வருவனவற்றிற்கு தேர்தல்நடத்தும் அதிகாரியிடமிருந்து தனிஅனுமதிபெற உரிமையுடையவராவார்.  அவைவருமாறு:-
(i) அவரதுபயன்பாட்டிற்கானஒருவாகனம்
(ii) தேர்தல்முகவரின் பயன்பாட்டிற்கான ஒருவாகனம் மற்றும்
(iii) ஒவ்வொருசட்டமன்றத் தொகுதிக்கானஅவரது பணியாளர்கள்அல்லது கட்சிபணியாளர்களின் பயன்பாட்டிற்கான மற்றொருவாகனம்.


💥(8) வாக்காளர்களைவாக்குச்சாவடிக்குஅழைத்து
வருவதற்கும், வாக்குச் சாவடிகளிலிருந்து
அழைத்துச்  செல்வதற்கும் வேட்பாளர் அல்லதுஅவரதுமுகவர் வாகனத்தைவாடகைக்கு எடுப்பதற்குஅல்லதுவாங்குவதற்குஅல்லது
பயன்படுத்துவதற்குஎந்தவொருவேட்பாளரும் அனுமதிக்கக்கூடாது.  இது 1951 ஆம் ஆண்டு மக்கள்பிரதிநிதித்துவச் சட்டத்தின் 133 ஆம் பிரிவின் கீழ்தண்டிக்கப்படவேண்டியமுறைகேடானசெயலாகும்.


💥(9)  இரண்டுநபர்களைமட்டுமேகொண்ட, வேட்பாளர்களின்  அரசியல்கட்சிகளின் தற்காலிகபிரச்சார
அலுவலகம் வாக்குச் சாவடியிலிருந்து 200 மீட்டர்கள்தொலைவில்
அமைக்கப்படலாம்.
தேவையில்லாத
கூட்டத்தைஅவர்கள்
அனுமதிக்கக் கூடாது.

💥(10)
14.05.2016 அன்றுமாலை 6.00 மணிமுதல்16.05.2016 அன்றுமாலை 6.00 மணிவரைகருத்துக் கணிப்புமுடிவுகளைவெளியிடுவதற்கு / கருத்துக் கணிப்புக்களை
நடத்துவதற்கு
தடைவிதிக்கப்படுகிறது.  04.04.2016 அன்றுகாலை 7.00 மணிமுதல் 16.05.2016 அன்றுமாலை 6.30 மணிவரையில்
வாக்குப்பதிவிற்கு
பிந்தையகருத்துக் கணிப்புக்கு
ஏற்கனவே
தடைவிதிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...