எம்.பி.பி.எஸ்., படிப்பு 17,000 விண்ணப்பம்...

ஐந்து நாட்களில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 17 ஆயிரம் பேர் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர். தமிழகத்தில், அரசு, சுயநிதி கல்லுாரிகள், இ.எஸ்.ஐ., கல்லுாரியையும் சேர்த்து, மாநில ஒதுக்கீட்டிற்கு, 2,788 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 1,055 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. இதற்கு, மே, 26 முதல்,
விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விடுமுறை நாளான ஞாயிறு அன்றும், விண்ணப்பங்கள் தரப்பட்டன. இந்த படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருவதால், ஐந்து நாட்களில், 17,090 விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர். விண்ணப்பங்கள், ஜூன், 6ம் தேதி வரை வழங்கப்பட உள்ளன. இது தவிர, விண்ணப்பங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பிக்க, ஜூன், 7 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...