கல்வி கடன் வட்டி சலுகை அளிப்பதில் மந்தம் பலன் பெற்றவர்கள் 20 சதவீதம் பேர் தான்...

கல்வி கடன் வட்டி தள்ளுபடி திட்டத்தின் கீழ், 20 சதவீதம் மாணவர்களே பயன் பெற்றுள்ளனர்' என, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கல்வி கடன் பெற்ற மாணவர்களுக்கு, கடன் தள்ளுபடி மற்றும் வட்டி தள்ளுபடி அளிக்கும் திட்டம், 2009 - 2014ம்
ஆண்டுக்கு அறிவிக்கப் பட்டது. இதற்கு, 'வட்டாட்சியர் கையெழுத்து பெற்று, உரிய படிவத்தில் வங்கிகளுக்கு அளிக்க வேண்டும்' என, மாணவர்கள், பெற்றோர் அறிவுறுத்தப்பட்டனர்.

இந்நிலையில், வட்டித் தள்ளுபடி பெற்றவர்கள் விவரம் குறித்து, மூத்த வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:கல்வி கடன் பெற்ற மாணவர்
களுக்கு, வட்டி தள்ளுபடி அளிக்கவும், புதிய கடன் அளிக்கவும், ஒவ்வொரு ஆண்டின் மத்திய பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கப்படுகிறது. தள்ளுபடி செய்யும் தொகையை, வங்கிகளுக்குஅரசு அளிக்க வேண்டும்.

இந்த தொகை தான், பட்ஜெட்டிலும் ஒதுக்கப்படும். எனவே, மத்திய பட்ஜெட்டுக்கு முன், ஒவ்வொரு வங்கியிடமும், கடன் பெற்ற மாணவர் விவரம்; கடன் தொகை; வட்டி விகிதம் மற்றும் வட்டித் தொகை போன்ற விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

ஆனால், வங்கிகள் இத்தகவல்களை தோராயமாக அளித்தன; துல்லியமாக அளிக்கவில்லை. அதனால், கல்வி கடன் வட்டி தள்ளுபடி திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகை, தேவையான அளவு இல்லை. ஒதுக்கப்பட்ட தொகையை, அனைத்து வங்கிகளுக்கும் பிரித்துக் கொடுக்கும் போது, வட்டித் தள்ளுபடி கோரும் அனைவரும் பயன் பெறவில்லை.

தற்போதுள்ள புள்ளி விவரங்களின் படி, வட்டி தள்ளுபடி கோரிய மாணவர்களில், 20 சதவீதம் பேரே பயன் பெற்றுள்ளனர். அதே போல், நடப்பு கல்வி ஆண்டில், கல்வி கடன் அளிக்க, 6,000 கோடி ரூபாய் தேவை. ஆனால், இந்தளவுக்கு பட்ஜெட்டில் நிதி
ஒதுக்கப்பட்டதாக தெரியவில்லை. எனவே, கல்வி கடன் கேட்கும் அனைத்து மாணவர் களுக்கும், கடன் கிடைக்குமா என்பது சந்தேகமே.

'கல்வி கடன் குறித்து அரசு அறிவிக்கும் சலுகைகளை அளிக்க, வங்கிகள் துல்லியமான கணக்குகளை அளிக்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...