அடுத்த 48 மணி நேரத்திற்கு கன மழை:வானிலை மையம் எச்சரிக்கை !

வங்கக் கடலில், இலங்கை அருகே உருவாகியுள்ள குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை, காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென் மேற்கு திசையை நோக்கி நகருவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த, 48 மணி நேரத்துக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.




இது குறித்து, வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன், நேற்று கூறியதாவது:

வங்கக் கடலில் இலங்கை அருகே உருவான குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை, தென் மேற்கு திசையை நோக்கி சற்று நகர்ந்து, மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டு உள்ளது.



இது, அதே திசையில் மேலும் நகர்வதோடு, காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

எனவே, அடுத்த, 48 மணி நேரத்துக்கு, தமிழகத்தின் தென் மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், கன மழை பெய்யும். தமிழகத்தின் வட உள் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இந்த நிலை நீடிக்கும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மணிக்கு, 50 - 60 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்.



சென்னையில், அடுத்த, 48 மணி நேரத்துக்கு, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வெப்பநிலை அதிகபட்சமாக, 34; குறைந்தபட்சமாக, 27 டிகிரி, 'செல்சியஸ்' பதிவாகும்.நேற்று காலை, 8:30 மணியுடன் முடிந்த, 24 மணி நேரத்தில், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில், அதிகபட்சமாக, 10 செ.மீ., மழை பெய்துள்ளது. திருச்சி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, புதுக்கோட்டை, திருவாரூர், திண்டுக்கல், நாமக்கல், விருதுநகர் மாவட்டங்களின், ஒரு சில இடங்களில், 1 - 5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...