48 மணி நேரத்துக்கு கன மழை தொடரும் !

வங்க கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால், அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், உள் வட மாவட்டங்களில் கன மழை பெய்யும்' என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் நேற்று கூறியதாவது:வங்க கடலில் இலங்கை அருகே உருவான குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து, மன்னார் வளைகுடா அருகே நிலை கொண்டிருந்தது. இது வட மேற்கு திசையை நோக்கி தொடர்ந்து நகர்ந்து
வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி சென்னையில் இருந்து, 175 கி.மீ., துாரத்தில் நிலை கொண்டு உள்ளது.இதனால் தமிழகத்தின் வட
கடலோர மாவட்டங்கள், உள் வட மாவட்டங்களில், அடுத்த 48 மணி நேரத்துக்கு கன மழை பெய்யும். தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும். காற்று அழுத்த தாழ்வு மண்டலம், தொடர்ந்து தென் மேற்கு
திசையை நோக்கி நகர்வதால், சென்னைக்கும், ஆந்திராவின் தென் கடலோரப் பகுதிக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் தொடர்ந்து மழை அல்லது கன மழை பெய்யும். மணிக்கு 50 - 60 கி.மீ., வேகத்தில் தரைக் காற்று வீசும். கடல் கொந்தளிப்பாக இருப்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மிக அதிகமாக
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 14 செ.மீ., மழை பெய்துள்ளது, என்றார்.



5 ஆண்டுக்கு பின்

சென்னையில் 2010க்குப் பின் கோடை மழை அதிகளவில் இப்போது பெய்துள்ளது. 2010 மே மாதம், 24 மணி நேரத்தில் 11 செ.மீ., மழை பெய்தது. இந்த நிலை இந்த ஆண்டு மீண்டும் நிகழ்ந்துள்ளது.
நேற்று மாலை 6:30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் சென்னை யில் 11.8 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.'ஸ்கைமெட்' என்ற தனியார் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தென்மேற்கு பருவ மழைக்கு முந்தைய மழை
தமிழகத்தில் சில ஆண்டுகளாக வலுவடைந்து வருகிறது. 'எல்நினோ' என்று அழைக்கப்படும் பசிபிக் கடலில் நிலவும் கடும் வெப்ப நிலையால் கோடை மழை அதி
கரித்து வருகிறது. அதன் எதிரொலி தான், தற்போது ஏற்பட்டுள்ள பருவ நிலை மாற்றம். வங்க கடலில் தற்போது ஏற்பட்டுள்ள குறைந்த அழுத்த தாழ்வு மண்டலத்தை, 'சிறு புயல்' என்றே அழைக்கலாம்' என கூறப்பட்டு உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...