50,000 ஆண்டு பழமையான கோடரி கண்டுபிடிப்பு !

உலகின் மிகவும் பழமையான, கற்காலத்து கோடரி, ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: ஆஸ்திரேலிய கண்டத்தில், 50 ஆயிரம் ஆண்டுக்கு முன், வாழ்ந்த மக்களிடம் ஆயுதங்கள் எதுவும்
இல்லை. பின், சிறு கல்லின் முனையை கூர்தீட்டி, கோடரியாக பயன்படுத்தியுள்ளனர்.
மேற்கு ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பகுதியில் உள்ள ஒரு குகையில், இந்த கோடரி துண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 46 முதல் 49 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்த கோடரி, உலகின் மிகவும் பழமையான கோடரியாக கருதப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...