6வது முறையாக ஜெ., பதவியேற்பதால் அ.தி.மு.க.,வினர்... குதூகலம்!:சென்னை பல்கலை மண்டபத்தில் இன்று மதியம் விழா..

சென்னை:தமிழக முதல்வராக ஆறாவது முறையாக ஜெயலலிதா இன்று பதவியேற்க உள்ளதால் அ.தி.மு.க.,வினர் குதுாகலம் அடைந்துள்ளனர்.

ஜெ., தலைமையிலான புதிய அரசின் பதவியேற்பு விழா சென்னை பல்கலைக்கழக மண்டபத்தில் இன்று மதியம் நடக்கிறது. விழாவில்
பங்கேற்கும்படி தி.மு.க., தலைவர் கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., 134 இடங்களில் வெற்றி பெற்றதால், ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சி அமைக்கும்படி, கவர்னர் ரோசய்யா அழைப்பு விடுத்தார். அழைப்பை ஏற்று, தமிழக முதல்வராக, ஜெயலலிதா இன்று மீண்டும் பதவியேற்கிறார்; அவரைத் தொடர்ந்து, 28 புதிய அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்.

*பதவி பிரமாணம்: பதவியேற்பு விழா, சென்னை பல்கலைக்கழக நுாற்றாண்டு விழா மண்டபத்தில், பகல், 12:00 மணிக்கு நடக்கிறது. ஜெ., மற்றும் அமைச்சர்களுக்கு, கவர்னர் ரோசய்யா பதவி பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார்.

விழாவில் கலந்து கொள்ளும்படி, தமிழகம் மற்றும் இந்திய அளவில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் பலருக்கு, அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. 3,150 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து எம்.எல்.ஏ.,
க்கள், லோக்சபா, ராஜ்ய சபா எம்.பி.,க்கள் மற்றும் முக்கிய பிரமுகர் களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

தி.மு.க., தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மற்றும், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலருக்கும், தமிழக அரசு அதிகாரிகள் நேரில் அழைப்பிதழ் கொடுத்துள்ளனர்.

பதவியேற்பு விழாவையொட்டி, சென்னை பல்கலைக்கழக நுாற்றாண்டு விழா மண்ட பத்தை அலங்கரிக்கும் பணியில், நான்கு நாட்களாக, பொதுத் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

விழா நடக்கும் மண்டபம் முழுவதும் வர்ணம் பூசப்பட்டுள்ளதோடு, மண்டபத்தின் உள்ளே உள்ள நாற்காலிகளும் வண்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டுள்ளன. வண்ண விளக்குகள், காகிதப் பூ அலங்காரமும், மண்டப வாயிலில் இருந்து, உட்புறம் வரை செய்யப்பட்டுள்ளது.

பிரம்மாண்டமாக நடக்க உள்ள பதவியேற்பு விழாவிற்காக, தமிழகம் முழுவதும் இருந்து, அ.தி.மு.க., தொண்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதால், விழா நடக்கும் பகுதிகளில், போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து, தற்காலிக சபாநாயகர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி, சென்னை ராஜ் பவ னில், மதியம், 1:30 மணிக்கு நடக்கிறது. மேட்டூர் தொகுதி, எம்.எல்.ஏ.,வான செம்மலை, தற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்கிறார். செம்மலைக்கு, கவர்னர் ரோசய்யா, பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ள முக்கியஸ்தர்கள்: பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத், வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, உ.பி.,முதல்வர் அகிலேஷ்
யாதவ், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

அத்துடன், இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பலருக்கும், அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, ஈரானுக்கு அரசு முறை பயணம் சென்றிருப்பதால், அவரால், பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முடியாது.

அதனால், அவருக்கு பதிலாக, மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

எல்.இ.டி., திரை மூலம் ஒளிபரப்பு:

* முதல்வர் ஜெயலலிதாவின் பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியை, தமிழகத்தின், 32 மாவட்டங்களிலும், எல்.இ.டி., அகன்ற திரையில், நேரடியாக ஒளிபரப்பு செய்ய, தமிழக அரசின் செய்தித் துறை ஏற்பாடு செய்துள்ளது

* பதவி ஏற்ற பிறகு, முதல்வர் ஜெயலலிதா கோட்டைக்கு சென்று பொறுப்பு ஏற்கிறார். அவரைத் தொடர்ந்து, அனைத்து புதிய அமைச்சர்களும் பொறுப்பு ஏற்கின்றனர்

* முதல்வராக பொறுப்பேற்றதும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் உத்தரவுகள் சிலவற்றில், ஜெயலலிதா கையெழுத்திடுவார் என்று தெரிகிறது.

விழாவில் கருணாநிதி பங்கேற்பாரா?: தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியாக, 89 எம்.எல்.ஏ.,க்களை பெற்றிருக்கும், தி.மு.க.,வின் தலைவர் கருணாநிதி மற்றும் அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் ஆகியோருக்கும், முதல்வர் பதவியேற்பு விழாவிற்கு வரும் படி, முறைப்படி அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

அதனால், அவர்கள் இருவரும், விழாவில் பங்கேற்பரா என்ற எதிர்பார்ப்பு, அரசியல் கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...