தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களும் தென் மாவட்டங்களும் என்றும் அதிமுகவுக்கு சாதகமானவை என்பதும் சென்னை மற்றும் வடமாவட்டங்கள் திமுகவுக்கு சாதகமானவை என்பதும் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
இன்று ஓட்டுகள் எண்ணப்பட்டபோது, கோவை, ஈரோடு மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளையும் வழித்து எடுத்துக்கொண்டு சென்றுவிட்டது அதிமுக. அது, வேறு எந்தக் கட்சிக்கும் எந்த வாய்ப்பையும் வழங்கவில்லை. திருநெல்வேலி, திருப்பூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களை அக்கட்சி கைப்பற்றியது.திருச்சி, மதுரை, திருவள்ளூர், சேலம் ஆகிய மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்கள் அதிமுக வசம் சென்றன.
திமுக அணிக்கு முழுமையாக கிடைத்த மாவட்டம் கன்னியாகுமரி. இங்குள்ள அனைத்து தொகுதிகளையும் அக்கூட்டணி அள்ளிக்கொண்டது. விழுப்புரத்தில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றியது.ஒரு காலத்தில் திமுகவின் கோட்டையாக இருந்து, இடையில் அக்கட்சியின் கையை விட்டுப்போய்விட்ட சென்னை, மீண்டும் திமுக வசம் திரும்பி உள்ளது. இங்கும் பெரும்பாலான இடங்களை அக்கட்சி கைப்பற்றி உள்ளது.
சிவகங்கை, துாத்துக்குடி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, பெரம்பலுார் ஆகிய மாவட்டங்கள் 'வஞ்சகம்' இல்லாதவை போலும், இரு கட்சிகளுக்குமே சமமான இடங்களை அவை தந்துள்ளன.