பயணச் சலுகைக்கான முன்பணம் பெறுவதில் புதிய சலுகையை மத்திய அரசு !

எல்.டி.சி., எனப்படும், மத்திய அரசு ஊழியர்களுக்கான பயணச் சலுகைக்கான முன்பணம் பெறுவதில் புதிய சலுகையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
        இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுஉள்ளதாவது:ரயில்களுக்கான முன்பதிவு காலம்
உயர்த்தப்பட்டுள்ளதால், பயணச் சலுகை பெறும் ஊழியர்கள், ரயில் மூலம் பயணம் மேற்கொண்டால், அதற்கான முன்பணத்தை, பயண தேதிக்கு, 125 நாட்களுக்கு முன்பே பெற்றுக் கொள்ளலாம்.மற்ற வகை பயணங்களுக்கு, ஏற்கனவே உள்ளபடி, 65 நாட்களுக்கு முன்பாக முன்பணத்தை பெற்றுக் கொள்ளலாம். முன்பணம் பெற்ற, 10 நாட்களுக்குள், பயணச் சீட்டின் நகலை, உரிய அதிகாரிகளிடம்
சமர்ப்பிக்க வேண்டும்.இதைத் தவிர, சதாப்தி மற்றும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் செய்யும் மத்திய அரசு ஊழியர்கள், ரயில்வேயின் உணவுகளை வாங்குவது கட்டாயமாக்கப்படுகிறது. இதற்கான கட்டணமும், பயணக் கட்டணத்துடன் சேர்த்துக் கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.நாடு முழுவதும், 50 லட்சம் பேர் மத்திய அரசு பணியில் உள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...