தேர்தல் கமிஷன், இரண்டு மாதங்களாக விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்தும், சென்னையில் ஓட்டுப்பதிவு சதவீதத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. அதே நேரத்தில், எந்த பெரிய அசம்பாவிதங்களும் இல்லாமல், சுமுகமாகவே ஓட்டுப்பதிவு நடந்தது.
சட்டசபை, லோக்சபா என எந்த தேர்தல்களாக இருந்தாலும், தமிழகத்திலேயே ஓட்டுப்பதிவு சதவீதத்தில் கடைசி இடத்தை பிடிப்பது தலைநகர், சென்னை தான்.
இந்நிலையை மாற்ற, தேர்தல் கமிஷன் ஒவ்வொரு தேர்தலிலும், பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.இம்முறை தேர்தல் அறிவிப்புக்கும், ஓட்டுப்பதிவுக்கும், 78 நாட்கள் அவகாசம் இருந்ததால், பிரசாரத்திற்கு அரசியல் கட்சியினர் அதை பயன்படுத்தி கொண்டதை காட்டிலும், விழிப்புணர்வு
பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் நன்றாகவே பயன்படுத்தியது.பேரணி, நாடகம், நடனம், சமூக வலைதளங்கள், ஊடகங்கள் மூலம் தொடர்ந்து, 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி பிரசாரங்கள் செய்யப்பட்டன. இதன் மூலம், 2011ல் நடந்த சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவை காட்டிலும், சற்று கூடுதலாக, 70 சதவீதத்தை கடந்து ஓட்டுப்பதிவை பெற வேண்டும் என, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் முயற்சித்தனர்.
ஆனால், இம்முயற்சிக்கு பெரும் பயன் ஏதும் இல்லை. சென்னையில், காலை, 7:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு, 9:00 மணி நிலவரப்படி, 11.31 சதவீதம், 11:00 மணி நிலவரப்படி, 22.56 சதவீதம், 1:00 மணி நிலவரப்படி, 37.70 சதவீதம், மாலை, 3:00 மணி நிலவரப்படி, 50:27 சதவீதம் என்ற நிலையில் ஓட்டுப்பதிவு இருந்தது. தேர்தல் கமிஷன் எதிர்பார்ப்பை விட, இந்த ஓட்டு சதவீதம் குறைவு.முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், அமைச்சர்கள் வளர்மதி, கோகுலஇந்திரா, பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை, தேசிய செயலர்
ஹெச்.ராஜா உள்ளிட்ட பிரபலங்கள், சென்னை மாவட்டத்தில் போட்டியிட்ட போதிலும், ஒரு சில சிறிய பிரச்னைகளை தவிர, பெரிய அளவில், அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.ஓட்டுப்பதிவின் போது, சில இடங்களில் ஓட்டுப்பதிவு
இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு, சில தொகுதிகளில்லேசான சாரல் மழை, மின்தடை போன்ற சில சில
இடையூறுகளை தவிர, வழக்கமாக தேர்தலின் போது சுட்டெரிக்கும் வெயில் நேற்று இல்லை; குளிர்ச்சியான சூழலே இருந்தது.
70 சதவீதம் சந்தேகம்!
சென்னையில் மாலை, 5:00 மணி நிலவரப்படி, ஓட்டுப்பதிவு, 57சதவீதமாக இருந்தது. கடைசி ஒரு மணிநேரத்தில் பெரிய அளவில் ஓட்டுப்பதிவு இருக்காது.கடந்த, 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது பதிவான, 68 சதவீதம் ஓட்டுப்பதிவை கூட, இம்முறை சென்னை மாவட்டம்
நெருங்குமா என்பதே சந்தேகம்!
முதியவர்களுக்கு வாகனங்கள் ஏற்பாடு
சென்னை மாவட்டத்தில், முதியோர், மாற்றுத்திறனாளிகளை, 100 சதவீதம் வாக்காளர் பட்டியலில் சேர்க்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
அதன்படி, 649 பேர் பட்டியலில் சேர்க்கப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டது. நேற்று ஓட்டுப்பதிவை முன்னிட்டு, முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களில் இருந்த முதியவர்கள், வாகனம், சக்கர நாற்காலி உதவியுடன், ஓட்டுச்சாவடிக்கு அழைத்து செல்லப்பட்டு, ஓட்டுப்பதிவு செய்ய வைக்கப்பட்டனர்.சென்னை மாவட்டத்தில், 16 தொகுதிகளிலும், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் ஓட்டளிக்க வசதியாக, 891 சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டு இருந்தன.
திருவொற்றியூர், பொன்னேரியில் மின் தடையால் பாதிப்புதிருவொற்றியூர் தொகுதியில், திருவொற்றியூர் நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஓட்டுச் சாவடிகள்; காலடிபேட்டை, அவர் லேடி பள்ளி, எர்ணாவூர் மின்நிலைய குடியிருப்பு பகுதி ஓட்டுச் சாவடிகள் உட்பட, 50க்கும் மேற்பட்ட ஓட்டுச் சாவடிகளில் நேற்று காலை, 10:30 மணிக்கு மின்சாரம் தடைபட்டது. மழை பெய்ததால், ஓட்டுச் சாவடிகள் இருளில் மூழ்கின. மின் வெட்டை சமாளிக்க முடியாமல், தேர்தல் பணியாளர்கள் திணறினர். வயதுமுதிர்ந்தவர்கள் ஓட்டு போடும் இயந்திரத்தில் உள்ள சின்னங்களை அடையாளம் காண முடியாமல், ஓட்டு போட சிரமப்பட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பின், மின் தடை நீங்கியதால், ஓட்டுப் பதிவு சீரடைந்தது.பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட, மணலி புது நகரில், ஜெயகோபால் கரோடியா பள்ளியில் உள்ள ஓட்டுச் சாவடிகளில், ஓட்டுப் பதிவு துவங்கியது முதல், மதியம் வரை, அரை மணி நேரத்திற்கு ஒரு முறை, மின் தடை ஏற்பட்டது.