ஆசிரியர்களை படுத்தி எடுக்கும் தேர்தல் அலுவலர்கள் !

உச்சக்கட்ட கொடுமை...!
16.05.2016 அன்று நமது சகோதரி ஒருவர், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி, வாக்குச்சாவடி எண் 234, GHSS, பெரியப்பட்டியில் Presiding Officerஆக பணியாற்றியுள்ளார். தேர்தல் முடிந்து சுமார் 10 மணியளவில் அவரது பூத்தில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, பெறப்பட்டது. சரிபார்த்து பெற்றவர் Zonal ஆகப் பணிபுரிந்த பாலக்கோடு கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ......
என்பவர். நமது சகோதரி பணி முடித்து, சுமார் 12 மணியளவில் வீட்டுக்குத் திரும்பிய நிலையில், சரியாக நள்ளிரவு12.52 மணிக்கு Zonal பாலக்கோடு கூ.உ.தொ.க. யிடம் இருந்து ஒரு மிஸ்டு கால்(?) வந்துள்ளது. உடனே சகோதரி அவரிடம் போன் செய்து என்னவென்று கேட்க, நீங்கள் 17(C) form 3 பிரதிக்குப் பதிலாக, ஒரே ஒரு பிரதி தான் கொடுத்துள்ளீர்கள். உடனடியாக தரும்புரி மாவட்ட ஆட்சியரகம் வந்து தரவும் எனக் கூறி விட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். ஆவணங்களைப் பெறும் போதே தேவையானவற்றை கேட்டுப் பெறாமல், நள்ளிரவில் போன் செய்து அவரை மிரட்டியுள்ளார். 17(C) ஐ அவர் வீட்டிலா வைத்திருப்பார். அதன் பிறகு பல முறை போன் செய்தும் மதிப்புமிகு Zonal போனையே எடுக்கவில்லை. பதறிப் போன நமது சகோதரி, சுமார் 50 கி.மீ. தொலைவிலிருந்து, ரூ. 2000/ க்கு வாடகைக் கார் பேசி, பதறியடித்து தருமபுரி மாவட்ட ஆட்சியரகம் விரைந்துள்ளார். அங்கு சென்ற பின்னும் போன் செய்த பொழுது Zonal ன் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுருந்தது. அதன் பின் சுமார் 3.30 மணியளவில் மாவட்ட ஆட்சியரகத்திலிருந்த RO ஒருவரிடம் தகவல் தெரிவித்து, தயார் செய்த படிவங்களை அவரிடம் கொடுத்து விட்டு காலை 6 மணியளவில் கடும் மன உளைச்சலுடன் வீடு திரும்பியிருக்கிறார்.
பொறுப்பற்ற முறையிலும், கடமையை சரிவரச் செய்யாமலும், பெண் ஒருவருக்கு 12.50 க்கு போன் செய்து மிரட்டியும், அதன் பின் பெண் ஆசிரியரின் போனை அட்டெண்ட் பண்ணாமலும் கடுமையான மன உளைச்சலும், கடும் அலைச்சலும், நள்ளிரவில் கடும் நெருக்கடியும் கொடுத்துள்ள அந்த பாலக்கோடு கூ.உ.தொ.க. அலுவலரின் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட நபர்கள் Zonal போன்ற முக்கியமான பொறுப்புகளை பெற்று அலைகழிக்கப்பட்டதை தமிழகம் முழுவதும் பார்த்தோம்... இனி வரும் காலங்களில், இவரைப் போன்றவர்கள் தாமாக ஒதுங்கிக் கொள்ள வேண்டும். அல்லது புகாரின் பேரில் ஒதுக்கித் தள்ள வேண்டும்.
என்ன செய்யலாம் இவர்களைப் போன்ற அரைகுறை அலுவலர்களை?

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...