நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் கோடிக்கணக்கில் தேங்கியிருப்பதை குறைக்க, அதிக நீதிபதிகள் நியமனம் அவசரத் தேவை என்ற கருத்து ஆழமாக பேசப்படுகிறது.
தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், சமீபத்தில் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்ற கருத்தைக் கூறி, கீழமை நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கியிருப்பதைச்
சுட்டிக்காட்டி கண்கலங்கியது, சற்று உணர்ச்சி பூர்வமானது.
இன்றைய நிலையில், 'கொலீஜியம்' என்ற முறையில் சட்ட அமைச்சக ஆலோசனையைப் பெற்று, நீதிபதிகள் நியமனம் நடந்து வருகிறது.இருந்த போதும், தேங்கியிருக்கும் வழக்கு எண்ணிக்கைகளை குறைக்க நீதிபதிகள் அதிக நேரம் பணியாற்றுவது குறித்தும் பேசப்படுகிறது.
'கால் டிராப்' என்ற விஷயத்தில், தொலைத் தொடர்பு ஆணையத்தின் முடிவை நிராகரித்த தீர்ப்பை அனைவரும் அறிவர். நாட்டில் வறட்சி நிலவும் மாநிலங்களில், தண்ணீர், உணவின்றி மக்கள் செத்து மடிவதை மத்திய, மாநில, அரசுகள் கண்டு கொள்ளவில்லை என்ற சுப்ரீம் கோர்ட் கருத்து பலரையும் கவர்ந்திருக்கிறது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்,
இம்மாதிரி நேரங்களில் வறட்சி நிலைக்கு தரப்படும் நிதி, மத்திய அரசு கைகளில் இருந்து, மாநில அரசுக்கு தரப்படுவதில் தாமதம் இருந்தது என்பதும் அதில், சுட்டிக்காட்டப் பட்டிருக்கிறது. இதற்கான நிதியை தாராளமாக தருவதில், அரசியல் அடிப்படை இருக்கிறது என்பதும், சுப்ரீம் கோர்ட் கருத்தாகும்.
கறுப்புப் பண விஷயத்திலும் சிறப்பு புலனாய்வு குழு மேற்பார்வையில், மத்திய அரசு அனைத்து விஷயங்களையும் சுப்ரீம் கோர்ட் முடிவுப்படி நடத்த வேண்டியுள்ளது. அது மட்டுமின்றி,
சமீபத்தில் உத்தரகண்ட் மாநில சட்டசபை சம்பவங்களை கோர்ட் கையாண்ட விதம், சபாநாயகர் அதிகாரத்தை மட்டும் அல்ல, ஜனாதிபதி ஆட்சி நியமன முறையையும் விசாரிக்கும் அளவுக்கு
வந்துள்ளது.
இந்த சூழ்நிலையில், அரசு நிர்வாக
நடவடிக்கைகள், அரசின் பணப் பரிவர்த்தனை நடவடிக்கைகள் அனைத்தும், சிறுக சிறுக உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் முடிவு செய்ய வேண்டிய காலம் வந்ததா என்ற விவாதம்
எழுந்திருக்கிறது.
'இந்திய சட்டசபை, மக்கள் பிரதிநிதிகளுடன் செயல்படும் சட்டமியற்றும் அமைப்பு; அதன் பணிகளை செவ்வனே செயல்படுத்தா விட்டால், நீதித்துறை இதன் விஷயங்களை, சிறுகச் சிறுக எடுத்து முடிவு செய்யும் அபாயம் உள்ளது' என, ராஜ்யசபாவில் நிதியமைச்சர் ஜெட்லி கூறியது, திடுக்கிடும் கருத்தாகும்.
முந்தைய அரசின், '2ஜி' ஊழல் விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் கிளப்பிய சந்தேகங்களால், அந்த ஊழல் தொகை பெரிதாக பேசப்பட்டதாகவும், அதில் தொலைத் தொடர்பு ஆணையம் எடுத்த முடிவைத் தாண்டி அரசியல் தலையீடு இருந்ததாகவும் பேசப்பட்டது. அதில் இருந்து அடுத்தடுத்த பல ஊழல் விவகாரங்கள் கோர்ட் பார்வைக்கு செல்ல, பா.ஜ.,வின் போக்கு காரணம் என, இப்போது காங்கிரஸ் விமர்சிக்கிறது.
இந்த சிக்கல் நிறைந்த விஷயத்தில், மத்திய சட்ட அமைச்சகம் சில கருத்துக்களை தெரிவித்தது, பல புதுத் தகவல்கள் வெளிவர உதவியிருக்கிறது. நீதிபதிகள் நியமனத் தேவை குறித்து, 2012ல், சுப்ரீம் கோர்ட் குழு ஒன்று, 'மக்கள் தொகைக்கு ஏற்ப விஞ்ஞான அடிப்படையில், கீழமைக் கோர்ட்டுகளில் நீதிபதிகள் தேவையை கணக்கெடுக்க வேண்டும்' என்று ஆலோசனை கூறியது.
இதனடிப்படையில் சுப்ரீம் கோர்ட் பார்வையில் அமைந்த, தேசிய நிர்வாக அமைப்பு கமிட்டி, இருமாதங்களுக்கு முன் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது. அதில், 'ஒவ்வொரு கீழமை நீதிமன்றங்களிலும் தேங்கியுள்ள வழக்குகளை, அதன் தன்மையை, உள்ளூர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கண்டறிந்து, அந்த வழக்கை விசாரித்து முடிவு செய்ய எத்தனை மணிநேரம் தேவை என்பதை, விஞ்ஞானபூர்வமாக ஆய்வு செய்ய வேண்டும்' என்று கூறியிருக்கிறது.
இதற்கான முடிவை, மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கவுடா மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் தெரியும். கீழமை நீதிமன்றங்களில் வழக்குகள் விரைவாக பைசல் ஆகும் பட்சத்தில், பொதுநல வழக்குகள், அரசியல் தொடர்பான
வழக்குகளும் குறையலாம்.
அதற்குள் நீதிபதிகள் தேர்வு முறைகளில், சுதந்திரமான, வெளிப்படையான தன்மை புதிதாக உருவாகும் பட்சத்தில், அரசமைப்பு சட்ட விதிகளின் விளக்கம் தரும் மக்கள் ஆதரவு அமைப்பாக, உயர் நீதிமன்றங்கள் மாற இந்த விவாதம் வழிவகுக்கும்.