சேலம், விழுப்புரம், நாமக்கல், விருத்தாச்சலம் உள்ளிட்ட பல இடங்களில் ஓட்டு்ப்பதிவு இயந்திரத்திரங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக தாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட சித்தாமணி பகுதி ஓட்டுச்சாவடியில் 45 நிமிடம் தாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது. சாத்தூர் தொகுதி
படநாதால் கிராமத்தில் 239வது எண் சாவடியில் 15 நிமிடங்கள் தாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது. இதே போன்று சேலம் அம்மாப்பேட்டை, செவ்வாய்பேட்டை பகுதிகளிலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டுள்ளது. உளுந்தூர்பேட்டை, கோவையின் பல பகுதிகளில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. கோவையில் சில இடங்களில் வாக்காளர்களுக்கு வைக்கப்பட்ட அடையாள மை காரணமாக அரிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதிக்கு உட்பட்ட கு.வேலாம்புதூர் பகுதியிலும் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது.