மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவு தேர்வு கூடாது,பெற்றோர்கள் போராட்டம் !

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி, சென்னை அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில், நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடைபெற்றது.

'மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவு தேர்வு கூடாது;
கிராமப்புற மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை தடுக்காதே; பிளஸ் 2 மாணவர்களின் அடிப்படை உரிமையை பறிக்காதே' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 50க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் மற்றும் பெற்றோர், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு தலைமை வகித்த, மருத்துவ மாணவர், பெற்றோர் கூட்டமைப்பின் தலைவர், டாக்டர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:மருத்துவ படிப்பில் சேர, தேசிய பொது நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு, மாநில உரிமையை பறிக்கும் செயல். நாடு முழுவதும், ஒரேமாதிரியான பாடத்திட்டம் இல்லாத நிலையில், மாநில ஒதுக்கீட்டு இடங்களும், மத்திய அரசுக்கு திரும்ப வாய்ப்புள்ளது.தமிழகத்தில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கையை தொடர வேண்டும். இதை வலியுறுத்தியே, உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம்.இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...