தமிழகத்தில் நாளை பலத்த, மிகப் பலத்த மழைக்கு வாய்ப்பு !

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்புள்ளதால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும்,  உள் மாவட்டங்களில் பலத்த மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

ஆனால், நிகழாண்டு மார்ச் மாதத்திலேயே வெப்பம் தகித்தது. சென்னை, மதுரை, பாளையங்கோட்டை, கரூர் பரமத்தி, கோவை, சேலம், தருமபுரி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 108 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகியது.

இந்த நிலையில், அண்மையில் நிலநடுக்கோட்டை ஒட்டிய இந்திய பெருங்கடல், தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது, தற்போது வங்கக் கடல், இலங்கை கடற்கரைக்கு அருகே வலுவடைந்து தீவிர குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதியில் உருவாகும் வாய்ப்புள்ளது. வட மேற்கு நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, பாம்பன், நாகை இடையே செவ்வாய்க்கிழமை காலை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, திங்கள்கிழமை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஒரு சில இடங்களில் பலத்த, மிகப் பலத்த மழையும், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பலத்த மழையும் பெய்யும்.

இதேபோல் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமையும் தமிழகம், புதுச்சேரியில் ஆங்காங்கே பலத்த, மிகப் பலத்த மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

திங்கள்கிழமை மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசக்கூடும். குறிப்பாக, தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் அதிகபட்சமாக 70 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும்.

மேலும் கடல் கொந்தளிப்புடன் இருக்கும். ஆகையால், அடுத்த 48 மணி நேரத்துக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆழ் கடலுக்குள் சென்ற மீனவர்கள் உடனே கரைக்கு திரும்புமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

சென்னை மாநகரைப் பொருத்தவரை, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் பரவலாக மழை பதிவாகியது. திருப்பூர் மாவட்டம் அவினாசி, கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் 50 மி.மீட்டர் மழை பதிவாகியது. அதேபோல் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம், நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 40 மி.மீட்டர் மழை பதிவாகியது.

வெப்பத்தைப் பொருத்த வரை, தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை வேலூரில் 103, திருப்பத்தூரில் 102, சேலத்தில் 100, சென்னையில் 99 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...