திட்டமிட்டபடி ஜூலை 11-இல் வேலைநிறுத்தப் போராட்டம்...!

ரயில்வே துறையில் தனியார்மயத்தைக் கண்டித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திட்டமிட்டபடி ஜூலை 11-ஆம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என எஸ்ஆர்எம்யு சங்கப் பொதுச் செயலர் என்.கண்ணையா கூறினார்.


 ரயில்வே துறை மற்றும் ராணுவத்தில் வெளிநாட்டினரின் பங்களிப்பைக் கண்டித்தும், ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும், 7-ஆவது ஊதியக் குழுவில் உள்ள குறைபாடுகளை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், ரயில்வே துறை ஊழியர்கள் உள்பட மத்திய அரசு ஊழியர்கள் வரும் ஜூலை 11-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

 இதனிடையே, சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற காலவரையற்ற வேலைநிறுத்தம் குறித்து விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர்

கண்ணையா செய்தியாளர்களிடம் கூறியது: மத்திய அரசின் தனியார்மயக் கொள்கையைக் கண்டித்து ஜூலை 11-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தினால் இந்தியா முழுவதும் உள்ள 12,731 பயணிகள் ரயில்களும், 7,400 சரக்கு ரயில்களும் இயங்காது. இதன் காரணமாக, நாளொன்றுக்கு பல ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படும்.

 மத்திய அரசின் தனியார்மய நடவடிக்கையினால் மத்திய அரசுப் பணியாளர்கள் மட்டுமல்லாமல், சாதாரண பொதுமக்களுக்கும் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக, ரயிலில் கொண்டு செல்லப்படும் பல அத்தியாவசியப் பொருள்களுக்கு மானியம் உள்ளது. ரயில்வே தனியார் மயமாக்கபட்டால் மானியம் ரத்து செய்யப்பட்டு, அத்தியவாசியப் பொருள்களான பருப்பு, தக்காளி உள்ளிட்ட பொருள்களின் விலை கடுமையாக உயரும்.

 மத்திய அரசின் இந்த நடவடிகையைக் கண்டித்து நடைபெறும் போராட்டத்துக்கு பிகார், உத்தரப் பிரதேசம், தில்லி உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் ஆதரவு அளித்துள்ள நிலையில், தமிழக அரசு இதுவரை ஆதரவு தெரிவிக்கவில்லை. எனவே, இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

 மத்திய அரசிடம் ஐந்து முறை பேச்சுவார்த்தை நடத்தியும் முறையான தீர்வு கிடைக்கவில்லை. இதனால் திட்டமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...