இன்றைய (13.06.2016) முக்கிய செய்திகள்....!

*🌹🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*

*🌟13.06.2016 * திங்கள்🌟*

*🙏🏻🙏🏻தலைப்பு செய்திகள்🙏🏻🙏🏻*

*⭕மாநில செய்திகள்⭕*

✳ சென்னை சென்டிரலில் ரூ.2½ கோடி தங்கம் பறிமுதல் 6 பேர் கைது

✳ ஜெயலலிதா உத்தரவுப்படி இசையமைப்பாளர் கோவர்தனத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது

✳ ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வை தமிழில் நடத்தக்கோரி பா.ம.க. வழக்கு மத்திய அரசு பரிசீலிக்கவேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவு


✳ போலி வாக்காளர்கள் நிறைந்த பட்டியலை அடிப்படையாக கொண்டு தேர்தல்கள் நடத்தப்படுவது ஜனநாயக செயல் முறைகளையே கேலி கூத்தாக்கி விடாதா? கருணாநிதி கேள்வி

✳ சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் கமிஷனர் அறிவுரை

✳ புதுச்சேரியில் மதுவிலக்கு சாத்தியமில்லை; மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு, நாராயணசாமி பேட்டி

✳ திருநெல்வேலி தெட்சணமாற நாடார் சங்க மும்பை கிளை பொதுக்குழு கூட்டம் தாராவியில் நடந்தது

✳ குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 61 பேர் மீது வழக்கு சென்னையில் போலீஸ் சோதனை

✳ பிளஸ்–2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 20 மாணவ–மாணவிகளுக்கு கல்வி உதவி சூர்யா–கார்த்தி வழங்கினார்கள்

✳ குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்; சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

✳ தடுப்புச்சுவரில் கார் மோதி கவிழ்ந்தது; சென்னை என்ஜினீயரின் மனைவி பலி; 3 பேர் படுகாயம்

✳ பல்லடம் அருகே பயங்கரம்: வடமாநில வாலிபர்கள் 2 பேர் கொலை; உடல்கள் தீ வைத்து எரிப்பு; குடிபோதையில் நண்பர்கள் வெறிச்செயல்

🈹 ஜனதா தளம் (எஸ்) கட்சியை யாராலும் அழிக்க முடியாது தேவேகவுடா பரபரப்பு பேச்சு

🈹 தாராவியில் இருபிரிவினர் இடையே பயங்கர மோதல் 3 பேர் காயம்; 10 பேர் கைது

🈹 மாட்டுங்காவில் மேயர் திறக்க இருந்த பூங்காவை காங்கிரஸ் எம்.எல்.ஏ., கவுன்சிலர் திறந்ததால் பரபரப்பு

🈹 ஜூகுவில் விமான நிலைய காவலாளிகள் மீது சரமாரி தாக்குதல் 5 பேருக்கு வலைவீச்சு

🈹 கோவிந்த் பன்சாரே கொலை வழக்கில் கீழ் கோர்ட்டு விசாரணை நிறுத்தி வைப்பு ஐகோர்ட்டு உத்தரவு

🈹 முதல் தகவல் அறிக்கையை செல்போனில் படம் பிடித்து கொள்ள புகார்தாரருக்கு அனுமதி டி.ஜி.பி. பிரவீன் தீக்ஷித் உத்தரவு (மும்பை)

*⭕தேசிய செய்திகள்⭕*

🔯குற்றம்சாட்டப்பட்டவரும், பாதிக்கப்பட்டவரும் சமாதானமாக சென்றாலும் “கொலை, கொலை முயற்சி வழக்குகளில் கோர்ட்டு சமரசம் ஆகாது” ஐகோர்ட்டு கருத்து

🔯 2004 முதல் 2013-ம் ஆண்டு வரை இந்தியாவில் இருந்து ரூ.34 லட்சம் கோடி கருப்பு பணமாக வெளிநாடுகளுக்கு சென்றதா? மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகம் விளக்கம்

🔯 இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த 2 கடத்தல்காரர்கள் சுட்டுக்கொலை ரூ.75 கோடி போதைப்பொருள் பறிமுதல்

🔯 காங்கிரஸ் பொதுச்செயலாளர்களாக குலாம்நபி ஆசாத், கமல்நாத் நியமனம் சோனியா காந்தி நடவடிக்கை

🔯 டெல்லியில் 5 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு ரூ.600 கோடி அபராதம் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க மறுத்ததால் நடவடிக்கை

🔯 ‘இன்டர்போல்’ கேட்ட விளக்கத்தை அமலாக்கப்பிரிவு அளித்தது விஜய் மல்லையாவுக்கு எதிராக விரைவில் சர்வதேச பிடிவாரண்டு

🔯 டெல்லி மேல்-சபை தேர்தலில் காங்கிரசுக்கு ஓட்டுப்போட்ட ஜனதா தளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் இடைநீக்கம் தேவேகவுடா தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

🔯 எதிர்கால திட்டங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் மத்திய அரசுக்கு பாராளுமன்ற குழு பரிந்துரை

🔯 கானா, ஐவரி கோஸ்ட், நமீபியா ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆப்பிரிக்க நாடுகளில் 6 நாள் சுற்றுப்பயணம்

🔯 டெல்லி மேல்-சபை தேர்தலில் முறைகேடு: தேர்தல் கமிஷனிடம் புகார் செய்ய காங்கிரஸ் முடிவு

🔯 டெல்லி மேல்-சபையில் பா.ஜனதா கூட்டணியின் பலம் 74 ஆக அதிகரிப்பு

🔯 டெல்லியில் 16–ந் தேதி வரிகள் வாரிய அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்

🔯 கங்கை நதிக்கரையில் திருவள்ளுவரின் 12 உயர அடி சிலை திறப்பு :பாஜக எம்.பி.தருண் விஜய் தகவல்

🔯 குஜராத்தில் சிங்கங்களுடன் செல்பி எடுக்க தடை மீறினால் கடும் அபராதம் விதிக்கப்படும்

*🌹🌹More education news @ www.sstaweb.com🌹🌹*

*⭕உலகச் செய்திகள்⭕*

🌍 அமெரிக்காவில் பயங்கரம் இரவு விடுதியில் 50 பேர் சுட்டுக்கொலை வாலிபர் வெறிச்செயல்

🌍 முதல்-மந்திரி விக்னேஸ்வரனின் கோரிக்கை நிராகரிப்பு: தமிழர் பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ் பெற முடியாது இலங்கை ராணுவம் அறிவிப்பு

🌍 ஈராக்கில் கடும் சண்டை மொசூல் நகரை மீட்க படைகள் முன்னேறுகின்றன

🌍 அமெரிக்காவில் குட்டி விமானம் விழுந்து நொறுங்கி 2 பேர் பலி

🌍 ஆளில்லா விமானம் பறந்ததால் துபாய் விமான நிலையம் ஒரு மணி நேரம் மூடல் 22 விமானங்கள் திருப்பி விடப்பட்டன

🌍 சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு; 4 பேர் படுகாயம்

*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*

🏸 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் சாய்னா நேவால்; ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மிண்டன் போட்டியில் அசத்தல்

🏏 2–வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்தியா – ஜிம்பாப்வே இன்று மீண்டும் மோதல்

🏏 முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா வார்னர் அபார சதம்

🏏 உலக சாதனையை நெருங்கியதால் எனது ரன்குவிப்பை கண்டு லாரா பயந்தார் சுயசரிதை புத்தகத்தில் கெய்ல் தகவல்

🏏 இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு 57 பேர் விண்ணப்பம்

⚽ ஐரோப்பிய கால்பந்து போட்டி: துருக்கியை வென்றது குரோஷியா இங்கிலாந்து–ரஷியா ஆட்டம் ‘டிரா

⚽ ரசிகர்களின் வன்முறை தொடர்ந்தால் இங்கிலாந்து, ரஷியா அணிகள் நீக்கப்படும் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு எச்சரிக்கை

⚽ கோபா அமெரிக்கா கால்பந்து: கால்இறுதிக்கு அமெரிக்கா தகுதி

*🌹🌹More education. news @ www.sstaweb.com*

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...