200க்கு 200 'கட் - ஆப்' பெறுவது எத்தனை பேர்?: மருத்துவ படிப்பு தரவரிசை இன்று வெளியீடு

'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, இன்று தரவரிசை பட்டியல் வெளியாகிறது. கடந்த ஆண்டு, 17 பேர், 200க்கு, 200 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்ற நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை கூடுமா, குறையுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில், 20 அரசு மருத்துவக் கல்லுாரிகளில் இருந்து, 2,253 இடங்கள்; ஆறு சுய நிதி கல்லுாரிகளில் இருந்து, 470; இரண்டு இ.எஸ்.ஐ., கல்லுாரிகளில் இருந்தும், 130 இடங்கள் என, மாநில அரசு ஒதுக்கீட்டில், 2,853 இடங்கள் உள்ளன.
இதற்கு, 26 ஆயிரத்து, 17 பேர் விண்ணப்பித்து இருந்தனர்; இதில், 25 ஆயிரத்து, 814 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான, சம வாய்ப்பு எண் என்ற, 'ரேண்டம்' எண் ஜூன், 14ம் தேதி வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 'கட் - ஆப்' மதிப்பெண் அடிப்படையிலான, தர வரிசை பட்டியல், இன்று வெளியிடப்படுகிறது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள, மருத்துவ கல்வி இயக்ககத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிடுகிறார்.
கடந்த ஆண்டில், 17 பேர், 200க்கு, 200 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்றிருந்தனர். இன்று எத்தனை பேர், இந்த இடங்களை பெறுவர் என, மருத்துவ கல்வி வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை, ஜூன், 20ம் தேதி துவங்கி, 25ம் தேதி வரை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடத்த, மருத்துவ கல்வி இயக்ககம் திட்டமிட்டு
உள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...