ஜூன் 23 வரை சட்டசபை சபாநாயகர் அறிவிப்பு...!

தமிழக சட்டசபை கூட்டம், ஜூன், 23 வரை நடைபெறும்,'' என, சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, நேற்று அவர் கூறியதாவது:சட்டசபை அலுவல் ஆய்வு கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, தமிழக சட்டசபை கூட்டம், வரும், 23 வரை நடைபெறும். தினமும் காலை, 10:00
மணிக்கு, சட்டசபை கூடும். இன்று, 17ம் தேதி, சட்டசபையில், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., சீனிவேல் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், நான்கு பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, கூட்டம் ஒத்தி வைக்கப்படும்.
நாளை மற்றும் நாளை மறுதினம் விடுமுறை. மீண்டும், 20ம் தேதி கூட்டம் துவங்கும். அன்றும், மறுநாளும், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும்; ஜூன், 22ல், கட்சித் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பேசுவர். 23ல், முதல்வர் பதிலுரை வழங்குவார். சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்தல் மற்றும் நிறைவேற்றுதல் நடைபெறும். சட்டசபை கூட்டத் தொடர் தற்போது தான் துவங்கி உள்ளது. எம்.எல்.ஏ.,க்கள் கொடுக்கும் கேள்விகளுக்கு, பதில் வர, 42 நாட்களாகும். எனவே, கேள்வி நேரம் இருக்காது. பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து, பின்னர் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...