தமிழகத்தில் மூடப்பட உள்ள டாஸ்மாக் கடை ஊழியர்கள் வேறு துறைக்கு மாற்றப்பட உள்ளனர். இதற்காக சீனியரிட்டி பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 2003ம் ஆண்டு நவம்பர் மாதம் தனியார் வசம் இருந்த டாஸ்மாக் கடைகள் டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள 6 ஆயிரத்து 500 டாஸ்மாக் கடைகளுக்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பட்டப்படிப்பு
படித்தவர்கள் சூப்பர்வைசர்களாகவும், 10ம் வகுப்பு, பிளஸ் டூ படித்தவர்கள் விற்பனையாளர்களாகவும் சுமார் 32 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர்.

டாஸ்மாக் கடைகள் மூலம் கிடைத்த பல ஆயிரம் கோடி ரூபாயை வைத்து அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தன. முதலில் மதுவிலக்கு சாத்தியமில்லை என கூறி வந்த முதல்வர் ஜெயலலிதா பின்னர் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.
தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் முதல்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தெரிவித்தார். அதன்படி மாவட்டம் தோறும் பள்ளி, கல்லூரிகள், கோவில்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள கடைகள் முதல் கட்டமாக மூடப்படுகின்றன.
இந்நிலையில் மூடப்படும் கடைகளில் பணிபுரியும் 500 சூப்பர்வைசர்கள், 2 ஆயிரம் விற்பனையாளர்களை மற்ற துறைகளுக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி பட்டதாரிகள் ஆசிரியர்கள் பணியிடத்திற்கும், விற்பனையாளர்கள் வருவாய் துறை உள்ளிட்ட வேறு துறைக்கும் மாற்றம் செய்யப்பட உள்ளனர்.
இதற்காக சீனியாரிட்டி பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்டியல் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. இதை பார்த்து திருத்தம் செய்ய வேண்டியதிருப்பின் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மேலாளரை சந்தித்து திருத்தம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ஏற்கனவே
வேலையில்லாமல் அரசு போட்டி தேர்வை எதிர்கொண்டு வரும் பட்டதாரிகளும், பள்ளி இறுதி படிப்பை படித்தவர்களும் விரக்தியில் உள்ளனர்.