ரயில் நிலையங்களுக்கு சென்றால் உஷார்....!

ரயில் நிலையங்களை அசுத்தம் செய்வோருக்கு ரூ.5000 வரை அபராதம் வசூலிக்க தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது.
ரயில் பயணத்தின் மூலம் ஏராளமான பயணிகள் தினமும் பயணம் மேற்கொள்கின்றனர். ரயில்வே நிலையங்களில் வரும் பயணிகள்
ஆங்காங்கே குப்பைகளை போட்டுவிட்டுச் செல்வதும் வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக ரயில்வே ஸ்டேஷனில் காத்திருக்கும் பயணிகள் டீ, காபி சாப்பிடுவதும், பின்னர் அந்த டீ கப்புகளை அங்கேயே கண்ட இடத்தில் போட்டு விடுகின்றனர்.


இது போல கண்ட இடத்தில் குப்பைகளை போட்டு, அசுத்தம் செய்பவர்களுக்கு ரூ.5000 வரை அபராதம் வசூலிக்க தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்பாக ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளில் அசுத்தம் செய்தால், ரூ.500 வரை அபராதம் வசூலிக்கப்ட்டது. தற்போது, அது 10 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு இது தொடர்பான பொது நல வழக்கு ஒன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்றது, அதில்,ரயில்வே ஸ்டேஷன் வளாகங்களில் அசுத்தம் செய்வர்களுக்கு ரூ.5000 வரை அபாராதம் வசூலிக்குமாறு இந்தின் ரயில்வே நிர்வாகத்திற்கு, பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...