தமிழகம் முழுவதும், 500 'டாஸ்மாக்' கடைகள் மூடப்பட்டதில், மக்கள் போராட்டம் நடத்திய பகுதிகளில், 81 கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன.
'கப்பம்' கிடைக்காமல் போய்விடும் என்பதால், விற்பனை குறைந்த கடைகளை மூடும் நாடகத்தை நடத்தி, டாஸ்மாக் அதிகாரிகள், முதல்வரை
ஏமாற்றி உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்றதும், டாஸ்மாக் எகடைகள் திறக்கும் நேரம், காலை, 10:00 மணியில் இருந்து, 12:00 மணிக்கு மாற்றப்பட்டது. இதன் மூலம், கடை திறந்திருப்பது, 2 மணி நேரம் குறைக்கப்பட்டது. அடுத்த கட்டமாக, '500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும்' என, முதல்வர் அறிவித்தார்.
டாஸ்மாக் அதிகாரிகளும், மூடப்படும் கடைகள் குறித்த பட்டியலை சமர்ப்பித்தனர். இதைத் தொடர்ந்து, சென்னை மண்டலம் - 58; கோவை மண்டலம் - 60; மதுரை மண்டலம் - 201; திருச்சி மண்டலம் - 133; சேலம் மண்டலம் - 48 என, 500 கடைகள், நேற்று அதிரடியாக மூடப்பட்டன.
தமிழகத்தில், வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் அருகேயுள்ள கடைகளை மூட வேண்டும் என, மக்கள் பல கட்ட போராட்டங்களை நடத்திய தால், மக்கள் சுட்டிக்காட்டிய கடைகள் அதிகம் மூடப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 500 கடைகளில், 81 கடைகள் மட்டுமே, மக்கள் எதிர்ப்புக்கு உள்ளானவை. மற்றவை எல்லாம், விற்பனை குறைவாக இருந்த கடை கள்.இதுகுறித்து, டாஸ்மாக் பொது மேலாளர் ஒருவர் கூறியதாவது:எதிர்ப்பு காரணமாக, 2013ல், தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த, 504 கடைகள் மூடப்பட்டன. மாநில நெடுஞ்சாலை யோர கடைகளையும் மூட வேண்டும் என, கோர்ட் வரை பிரச்னை சென்றது. கடைகள் பட்டி யல் தயாரிக்கப்பட்டாலும், எதுவும் மூடப்பட வில்லை.
தற்போது அரசு உத்தரவுப்படி, மக்கள் போராட் டம் நடத்திய பகுதி கடைகள் - 81; மாநில நெடுஞ் சாலையோரம் இருந்தவை - 60; 50 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக விற்பனை நடந்த கடைகள் - 359 என, 500 கடைகள் மூடப் பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, பொதுநல அமைப்பினர் கூறிய தாவது:முதல்வர் நல்ல எண்ணத்தில், கடை களை மூட உத்தரவிட்டார். ஆனால், தங்கள் வருமானம் போய் விடும் என, பார் உரிமை யாளர்கள் கொடுத்த நிர்ப்பந்தம் ள்ள காரணமா கவும், தங்களுக்கான, கப்பம் போய் விடும் என, கருதியும், டாஸ்மாக் அதிகாரிகள், அதிக விற்பனை இல்லாத கடைகளின் பட்டி யலை கொடுத்துள்ளனர்.
மக்கள் மூட வலியுறுத்திய கடைகளின் பட்டி யலை தராமல், சுய விருப்பத்தில் கடைகளை தேர்வு செய்து கொடுத்து, முதல்வரை, அதிகாரி கள் ஏமாற்றி உள்ளனரோ என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கிடையில், கோவையில், பாப்பநாயக்கன் பாளையம் பழையூர் பகுதியில், வழிபாட்டுத் தலம், பள்ளி, குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இன்று நடக்கும் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திலும் புகார் செய்ய முடிவு செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி - நெல்லிக்குப்பம் சந்திப்பு சாலையில் உடாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, கூடுவாஞ்சேரி ரயில்வே ஸ்டேஷன் சாலையில், மக்கள் நலக் கூட்டணி சார்பில், நேற்று கண்டனஆர்ப்பாட்டம் நடந்தது.
முதல்வர் தொகுதியில்மூடல் இல்லை:
முதல்வர் தொகுதியான, சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட, தொற்றுநோய் மருத்துவமனை, புதுவண்ணாரப்பேட்டை பழைய போலீஸ் நிலையம், வ.உ.சி., நகர் மார்க்கெட், தண்டையார்பேட்டை வினோபா நகர், வைத்தியநாதன் பாலம் அருகே உள்ள கடை என, ஐந்து கடைகளை மூடக்கோரி, மக்கள் அடுத்தடுத்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். நேற்று, மூடப்பட்ட கடைகளில், இவற்றில் ஒன்று கூட இல்லை. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலாப்பூர் லஸ் பறக்கும் ரயில் நிலைய வாசல், பட்டினப்பாக்கம் மற்றும் மதுரவாயல் பகுதிகளில் உள்ள, மதுக் கடைகளை அகற்ற வேண்டும் என, போராட்டங்கள் நடந்தன; இந்த கடைகளும் மூடப்படவில்லை.