இதயம் இல்லாமல் 555 நாட்கள் வாழ்ந்த தன்னம்பிக்கை இளைஞர்

அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டான் லார்க்கின் என்ற இளைஞர், இதயம் இல்லாமல், செயற்கை இதயத்தோடு சுமார் 555 நாட்கள் அதாவது ஒன்றரை ஆண்டு காலம் உயிர் வாழ்ந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிக்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்டான் லார்க்கினுக்கு தற்போது 25 வயது
ஆகிறது. சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு, அவருக்கு மரபுசார்ந்த இதய நோய் தாக்கியது.
இதனால், அவரது இதயம் செயலிழக்கும் நிலை ஏற்பட்டதால் அவரது இதயத்தை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு மாற்று இதயம் கிடைக்காது என்பதை உணர்ந்த மருத்துவர்கள், அவருக்கு செயற்கை இதயத்தை பொருத்தினர்.
கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் அவரது பாதிக்கப்பட்ட இதயம் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, செயற்கை இதயம் பொருத்தப்பட்டது.


செயற்கை இதயம் என்றதும், சின்னதாக கையளவு என்று நினைக்கவேண்டாம்.
ஒரு கட்டிங் மெஷின் அளவில், முதுகு பக்கத்தில் பொருத்தப்பட்டது. இந்த செயற்கை இதயம், விலா எலும்புக்கு அடியில் ஒரு குழாய் மூலம் உடலுடன் இணைக்கப்பட்டு, ரத்த சுழற்சியை இந்த கருவி மேற்கொண்டு வந்தது.
இவருக்கு செயற்கை இதயம் கைகொடுத்ததால், மருத்துவர்களின் அனுமதியோடு மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்து தனது இயல்பான வாழ்க்கையை வாழத் தொடங்கினார்.
சொல்லப்போனால், பள்ளிக்கூட பிள்ளைப் போல, முதுகில் எப்போதும் அந்த செயற்கை இதயத்தோடு அவர் வாழ வேண்டி இருந்தது. இப்படி ஒரு நாள் இரண்டு நாள் அல்ல... சரியாக 555 நாட்கள், ஒன்றரை ஆண்டுகள் வாழ்ந்தார்.
அந்த செயற்கை இதயத்தோடு அவர் கால்பந்து விளையாடினார், சுதந்திரமாகவே வாழ்ந்தார்.
இறுதியாக, அவருக்கு ஒரு மாற்று இதயம் கிடைக்கப்பெற்று அறுவை சிகிச்சை மூலம் அது பொறுத்தப்பட்டது. செயற்கை இதயம் அகற்றப்பட்டு குணமடைந்து வருகிறார்.
இதற்கிடையே, அவரது தம்பிக்கும் இதே பிரச்னை ஏற்பட்டு, இவருக்கு முன்னதாகவே அவருக்கு மாற்று இதய பொருத்தப்பட்டது.
தனது தன்னம்பிக்கை மூலம், இவரால் இன்னும் சில காலம் செயற்கை இதயத்தோடு நலமாக வாழ முடியும் என்று மருத்துவர்கள் நம்பியதால், இவருக்கு முன்னதாகவே இவரது தம்பிக்கு மாற்று இதயத்தைப் பொருத்தினர்.
உயிர் வாழ முக்கியமாகக் கருதப்படும் இதயம் இல்லாமல் நாம் வாழ்கிறோம் என்பதை எப்போதுமே உணர்ந்ததில்லை என்கிறார் தன்னம்பிக்கை நட்சத்திரம் ஸ்டான் லார்க்கின்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...