ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம்:5 பேருக்கு மறுவாழ்வு...!

சென்னை:விழுப்புரம் மாவட்டம், நெடுகம்பேட்டையைச் சேர்ந்தவர் சேகர், 60;
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். கடந்த, 10ம் தேதி, கிராமத்தில் நடந்த சாலை விபத்தில் சிக்கி, அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சென்னை, ராமச்சந்திரா மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். மூளையில் ரத்தக்கசிவு இருந்ததால், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, அடுத்த நாள் மூளைச்சாவு நிலையை அடைந்தார்.

அவரது மனைவி ஜோசபைன் மேரி, மகன் அருண் ஆகியோர், சேகரின் உடல் உறுப்புகளை தானம் அளிக்க முன்வந்தனர். கல்லீரல், சிறுநீரகங்கள், நுரையீரல், இதய வால்வு என, ஐந்து உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டன.இவற்றை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட உடல் உறுப்பு மாற்று சிகிச்சையால், ராமச்சந்திரா மருத்துவமனை, அடையாறு மலர் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த நான்கு பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

'இதய வால்வு பாதுகாக்கப்பட்டு வருகிறது; தேவைப்படுவோருக்கு பொருத்தப்படும்' என, டாக்டர்கள் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...