பிள்ளைகளை பெற்றோர் கண்காணிப்பது அவசியம்! மொபைல் போன்களால் சீரழியும் அபாயம்....!

பள்ளி மாணவ மாணவியர், மொபைல் போன் பயன்படுத்துவதால் சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் மொபைல்போன் பயன்பாடு தவிர்க்க இயலாத ஒன்றாக மாறிவிட்டது. தகவல் பரிமாற்றம் மிக எளிமையாக்கி உள்ள மொபைல்போன், உலக நிகழ்வுகள் அனைத்தையும் உள்ளங்கைக்கு கொண்டு வரும் சாதனமாகவும், பல சமயங்களில் போலீசார் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க, உறுதுணையாகவும் உள்ளது.



இப்படி, மொபைல் போன் பல நல்ல விஷயங்களுக்கு பயன்படும் அதேவேளையில், சமூக சீரழிவுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது. குறிப்பாக, நல்லது எது, தீயவை எது என பகுத்தாயும் மனப்பக்குவம் இல்லாத, பள்ளி மாணவ, மாணவியர்கள் மொபைல்போன் பயன்படுத்துவதால் பல சீரழிவுகளை சந்தித்து வருகின்றனர்.



கவனத்தை திசை திருப்பும்: 'ஆன்ட்ராய்டு' போன்களால் பெரும் ஆபத்து உள்ளது. மொபைல் போன் பயன்படுத்துவதால், கவனச் சிதறல் ஏற்பட்டு படிப்பில் ஆர்வம் குறைந்துவிடும் அபாயம் உள்ளது. மேலும், வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்றவற்றில் மூழ்கிவிட்டால் நேரம் போவதே தெரியாது. அவற்றை பயன்படுத்தும் ஆர்வ மிகுதியால், நாளடைவில் அதற்கு அடிமையாகிவிடும் ஆபத்தும் உள்ளது.



எனவே, தேவையே இல்லாமல் பிள்ளைகள் மொபைல் போன் பயன்படுத்துவதை பெற்றோர் அனுமதிக்கக் கூடாது. தவிர்க்க இயலாத சூழலில், மொபைல் பயன்படுத்த வேண்டி இருந்தால், அவ்வப்போது தங்கள் பிள்ளைகளின் நடத்தையை கண்காணிக்க வேண்டும். இல்லாவிட்டால், பெரும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்.



மேலும், பள்ளி நிர்வாகங்களும், மாணவ மாணவியர் பள்ளிக்கு மொபைல் போன் கொண்டு வருவதையோ, பள்ளி வளாகத்தில் மொபைல் பயன்படுத்துவதையோ அனுமதிக்கக் கூடாது.

டியூஷனில் அரட்டை: பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவியர் பெரும்பாலும் குறித்த நேரத்தில் வீடு திரும்பி விடுகின்றனர். அதனால் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், பள்ளி முடிந்த பிறகு டியூஷன் செல்லும் பிள்ளைகள் என்ன செய்கின்றனர் என்பதை பல பெற்றோர் கண்டுகொள்வதில்லை.



டியூஷன் செல்லும் முன்போ, அல்லது முடிந்த பின்னரோ மாணவியர் சிலர், சக நண்பர்களிடம் லுாட்டியடிக்க ஆரம்பித்து விடுகின்றனர். சமயத்தில் இது தவறான முடிவை எடுக்க துாண்டி விடுகிறது. எனவே, பெற்றோர் தங்கள் பிள்ளைகள் விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.



கண்காணிப்பு அவசியம்

அண்மையில் கடலுாரில் உள்ள பிரபல கான்வென்ட் பள்ளியில் பயிலும் மாணவிகள் சிலர், தங்கள் நண்பர்களை சந்திக்க புதுச்சேரிக்கு சென்றுள்ளனர். அப்போது, பள்ளி சீருடை காட்டிக் கொடுத்ததால், சமூக ஆர்வலர்கள் மூலம் மாணவியர் பள்ளிக்கு அழைத்து வந்து ஒப்படைக்கப்பட்டனர். பதற்றம் அடைந்த பள்ளி நிர்வாகம், உடனடியாக பெற்றோர்களை அழைத்து கூட்டம் நடத்தியது. பிள்ளைகளுக்கு மொபைல் போன், பணம் கொடுக்காதீர்கள். டியூஷன் செல்லும்போதும், வீட்டில் தனி அறையில் இருக்கும் போதும் பெண் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டியது பெற்றோரது கடமை என, பள்ளி நிர்வாகத்தினர் பெற்றோர்களுக்கு அட்வைஸ் கூறி உள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...