இதுவரை 6.5 கோடி பேருக்கு ஆதார் எண்: இம்மாதத்துடன் தமிழகத்தில் பணி நிறைவு.

தமிழகத்தில், இதுவரை, 6.5 கோடி பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகள், இம்மாத இறுதியில் நிறைவு பெறுகின்றன.ஐந்து வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், ஒருங்கிணைந்த அடையாள எண் எனப்படும், ஆதார் அட்டை வழங்கும் பணி, 2010 செப்டம்பரில் துவங்கப்பட்டது.
இதற்காக, 36 ஆயிரம் ஆதார் பதிவு
நிலையங்கள் அமைக்கப்பட்டு, 83 தனியார் ஏஜன்சிகளிடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டன. 87 ஆயிரம் பேர், ஆதார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இயற்கை சீற்றங்கள், லோக்சபா, சட்டசபை தேர்தல்கள் என, பல்வேறு நிகழ்வுகளின் போதெல்லாம் ஒத்திவைக்கப்பட்டு, பல்வேறு கட்டங்களாக, ஆதார் எண் வழங்கும் பணி நடந்தது.
ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்களின், கண் விழி மற்றும் கைவிரல் ரேகைகளோடு, அவர்களின் வயது, பாலினம், முகவரி ஆகியன சேகரிக்கப்பட்டு, ஆதார் எண் உருவாக்கப்பட்டு உள்ளது. ஆதார் எண் உருவாக்கப்பட்டோருக்கு, அவர்களின் வீட்டு முகவரிக்கு, தபால் மூலம் ஆதார் அட்டை அனுப்பப்பட்டு உள்ளது. ஆதார் இணையத்திலும், அவர்களின் எண் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், 90 சதவீத்துக்கும் மேற்பட்டோருக்கு, ஆதார் எண் உருவாக்கப்பட்ட நிலையில், இம்மாதத்துடன் ஆதார் எண் வழங்கும் பணி முடிவடைகிறது.
இது குறித்து, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவி இயக்குனர் கிருஷ்ணா ராவ் கூறியதாவது:
தமிழகத்தில், 7.21 கோடி பேருக்கு, ஆதார் எண் உருவாக்க வேண்டும். இதற்காக, பொது முகாம்கள் நடத்தப்பட்டன. கணிசமாக மக்கள் குடியிருக்கும் பகுதிகளில், தனி முகாம்கள் நடத்தப்பட்டன. பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலர் குடும்பங்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என, தனித்தனியாகவும் முகாம்கள் நடத்தப்பட்டன.
தமிழகத்தின், 7.21 கோடி பேரில், 6.52 கோடி பேருக்கு, ஆதார் எண் உருவாக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள, 69 லட்சம் பேரில், 32 லட்சம் பேருக்கு, கண் விழி மற்றும் கைவிரல் ரேகைகள் சேரிக்கும் பணி முடிந்து, ஆதார் எண் அளிக்க வேண்டி உள்ளது. இவர்கள் தவிர, 37 லட்சம் பேருக்கு, கண் விழி மற்றும் கைவிரல் ரேகை சேகரிக்க வேண்டி உள்ளது.
இப்பணிகள் பெரும்பாலும், இம்மாத இறுதியில் முடிந்து விடும். இதுவரை சேகரிக்கப்பட்ட தனிநபர் விவரங்கள், அவர்களின் கண் விழி மற்றும் கைவிரல் ரேகைகளோடு, தமிழக அரசிடம், செப்டம்பர் மாதம் ஒப்படைக்க வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதற்கிடையே, விடுபட்டு போனவர்களை சேர்க்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஜூன் மாதத்துக்குப் பின் முகாம்கள் நடக்காது. ஆதார் எண் பெற விரும்புவோர், அதற்காக அமைக்கப்பட்டு உள்ள, நிரந்தர முகாம்களில் பதிவு செய்யலாம்.
ஆதார் அட்டையில் பெயர், பாலினம், வயது, முகவரி ஆகியவற்றில் பிழைகள் இருந்தால், அவற்றை நிரந்தர மையங்களில், சரி செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

நிரந்தர மையம்
தமிழகத்தின், 32 மாவட்டங்களில் உள்ள தாலுகா அலுவலகங்களில், 313; நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில், 146; வருவாய் மண்டல அலுவலகங்களில், 27 என, 486 நிரந்தர ஆதார் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
எத்தனை பேருக்கு
நாட்டில் உள்ள, 121 கோடி பேருக்கு, ஆதார் எண் வழங்க வேண்டிய நிலையில், 2016 ஏப்ரல் இறுதி வரை, 101 கோடி பேருக்கு, ஆதார் எண் உருவாக்கப்பட்டு உள்ளது. இது, மொத்த மக்கள் தொகையில், 85
சதவீதம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...