7-ஆவது ஊதியக் குழுவிலும் மீண்டும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய பாதிப்பு ஏற்பட்டால் சங்கத்தின் சார்பில் காலவரையற்ற போராட்டம்...!

7-ஆவது ஊதியக் குழுவிலும் பாதிப்பு ஏற்பட்டால் போராட்டத்தி் ஈடுபடுவோம் என இடைநிலை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் விழுப்புரம் தனியார் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜெ.ராபர்ட் தலைமை வகித்தார்.
மாநிலத் தலைவர் ச.ரெக்ஸ் ஆனந்தகுமார் முன்னிலை வகித்தார்.
மாநில பொருளாளர் கே.கண்ணன் சங்கத்தின் நிதிநிலை அறிக்கையை வாசித்தார். கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள், பொருளாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மத்திய அரசின் 6-ஆவது ஊதியக் குழுவில், 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் முரண்பாட்டால், ஆசிரியர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், ஒவ்வொரு ஆசிரியருக்கும் ரூ.6 லட்சம் வரை தொகை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக, உடனடியாக அரசின் கவனத்தை ஈர்க்க தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.
சி.பி.எஸ் களைவதற்காக அமைக்கப்பட்ட வல்லுநர் குழு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது என்ற
அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்ய வலியுறுத்துவதோடு, அதனை அரசும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
7-ஆவது ஊதியக் குழுவிலும் மீண்டும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய பாதிப்பு ஏற்பட்டால் சங்கத்தின் சார்பில் காலவரையற்ற போராட்டத்தை கையில் எடுக்கப்படும்.
மத்திய அரசு 7-வது ஊதியக்குழுவை அமல்படுத்தியவுடன், மாநில அரசும் அதனை அமல்படுத்த வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றினர். மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.வேல்முருகன் நன்றி கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...