ஹலோ... ஹலோ' 90 கோடி'உவ்வே... கப்பு' 64 கோடி: கருத்தரங்கில் தகவல்...!

நாட்டில் 13 கோடி வீடுகளில் கழிப்பறைகளை பயன்படுத்தாமல் திறந்தவெளியை பயன்படுத்துகின்றனர்,'' என, மதுரையில் நடந்த 'எர்த்பேக்' தொழில்நுட்ப கருத்தரங்கில் அரசு கல்லுாரி பேராசிரியர் கிறிஸ்டோபர் ரமேஷ் தெரிவித்தார்.

அவர் பேசியதாவது:உலகில் இந்தியா 17 சதவீத மக்கள் தொகையை கொண்டுள்ளது. உலகில் 60 சதவீதம் பேர் கழிப்பறை இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது; இதில் இந்தியாவின் பங்கு அதிகம். பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் பெருக, இது முக்கிய காரணம்.
இந்தியாவில் 13 கோடி வீடுகளில் கழிப்பறைகள் இல்லை; ௬௪ கோடி பேர் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். ஆனால் ௯௦ கோடி அலைபேசிகள் பயன்பாட்டில் உள்ளன.
இந்நிலையை தவிர்க்க மத்திய அரசு எடுத்த முயற்சிதான் 'துாய்மை இந்தியா' திட்டம். கழிப்பறை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை, குழந்தைகளிடம் ஏற்படுத்துவது அவசியம்.
இவ்வாறு பேசினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...