பள்ளிக்கு அடிப்படை வசதி கேட்டு போராட்டம்! குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு.

திருப்பூரில், ஆதிதிராவிடர் நல பள்ளியில், போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என குற்றம் சாட்டி, குழந்தைகளை அனுப்ப மறுத்து, பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர், கோவில்வழியில், ஆதிதிராவிடர் நல அரசு
உயர்நிலைப்பள்ளி உள்ளது. இதில், ஒரு கட்டடத்தில், 150 மாணவர்களுக்கு துவக்கப்பள்ளி, மற்றொன்றில், 270 பேர் பயில உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு, கழிப்பிடம், குடிநீர், மைதான வசதியில்லை. பிரதான ரோட்டில் உள்ளதால், மாணவர்களின் பாதுகாப்புக்கும் பெரும் ஆபத்து உள்ளது.



நேற்று காலை, இப்பள்ளியில், பெற்றோர் - ஆசிரியர் கழக ஆலோசனை கூட்டம் நடந்தது. பங்கேற்ற பெற்றோர், பள்ளிக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும்; இட வசதியுள்ள வேறிடத்துக்கு மாற்ற வேண்டும்; கூடுதலாக ஆசிரியர் நியமிக்க வேண்டும்; பள்ளி அருகே உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் என, பிரச்னைகளை பட்டியலிட்டு, உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.



ஆதிதிராவிடர் நல மாவட்ட அலுவலர் காமாட்சிதாசன், தலைமையாசிரியர் சுப்ரமணியம் உள்ளிட்டோர் பேச்சு நடத்தினர். உடன்பாடு ஏற்படவில்லை.ஆவேசமடைந்த பெற்றோர், வசதி செய்து தரும் வரை, தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என கூறி, திருப்பூர் - தாராபுரம் ரோட்டில் அமர்ந்து, மறியலில் ஈடுபட்டனர். ஏறத்தாழ, ஒன்றரை மணி நேரம், மறியல் நடந்தது.



இதுதொடர்பாக ஆலோசனை நடத்திய அதிகாரிகள், மறியலில் ஈடுபட்டோருடன், மீண்டும் பேச்சு நடத்தினர். கழிப்பிடம் மற்றும் குடிநீர் பிரச்னைக்கு உடனடி தீர்வு ஏற்படுத்தவும், கட்டடம் கட்ட தோட்டக்கலைத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்கள் கேட்டுப்பெறவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். சமாதானமடைந்த பெற்றோர், மறியலை கைவிட்டனர்.



இப்போராட்டத்தால், கோவில்வழியில் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது. தாராபுரம் ரோட்டில் சென்ற வாகனங்கள், மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. பள்ளியில் உள்ள பிரச்னைகள் குறித்து, கலெக்டரை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்துள்ளதாக, பெற்றோர் - ஆசிரியர் சங்க தலைவர் நடராஜன் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...