கல்வித்திறன் குறைந்த மாணவர்களுக்கு:ஆர்.எம்.எஸ்.ஏ.,வில் புதிய திட்டம்.

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) மூலம் கல்வித்திறன் குறைந்த குழந்தைகளை மேம்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்படுகிறது. இதனால் பலர்
கல்வித்திறனில் பின்தங்கியுள்ளனர். அவர்கள் 9, 10 வகுப்புகளில் தோல்வி அடைகின்றனர்.

இதனை தவிர்க்கும் வகையில் இந்த ஆண்டு முதல் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி சார்பில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இதில் அரசு மற்றும் உதவிப்பெறும் பள்ளிகளில் 9 ம் வகுப்பில் சிறப்பு தேர்வு நடத்தி, கல்வித்திறன் குறைந்த மாணவர்கள் கண்டறியப்பட உள்ளனர். அவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் அனைத்து பாடங்களுக்கும் காலை, மாலை பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளன.



அதே போல் டி.என்.பி.எஸ்.சி.,போன்ற போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காக 10 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட உள்ளன. இதற்காக அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட அதிகாரிகள் பள்ளிகளின் பட்டியலை தயாரித்து வருகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...