மதுரை காமராஜ் பல்கலையில் அடுத்தடுத்து முறைகேடுகள்:அதிர்ச்சியில் விசாரணை அதிகாரிகள்.

மதுரை காமராஜ் பல்கலையில் அடுத்தடுத்து வெளியான முறைகேடுகளால் விசாரணை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இப்பல்கலை தொலை நிலைக் கல்வியில் 2014- 15ம் ஆண்டில் 1918 மாணவர்கள் நேரடி சேர்க்கையில் சேர்ந்து தேர்வு எழுதினர். பலர் போலி சான்றிதழ்கள் சமர்ப்பித்தும், அதற்காக தொலைநிலைக் கல்வி
மையங்களுக்கும், பல்கலையில் உள்ள முக்கிய நபர்களுக்கும் ரூ.பல லட்சம் வழங்கியதாகவும் புகார்கள் எழுந்தன. இதனால் தேர்வு முடிவுகள் ஓராண்டாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.



இதில், உண்மை சான்றிதழ்கள் சமர்ப்பித்து தேர்வு எழுதியவர்களும் பாதித்துள்ளனர். இதுகுறித்து உயர்கல்வி செயலருக்கு பல்வேறு புகார்கள் சென்றதால் தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டார்.இதன் தொடர்ச்சியாக தொலைநிலைக் கல்வி உயர் அதிகாரி, கண்காணிப்பாளர்கள் உட்பட 6 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தற்போதும் விசாரணை நடக்கிறது.



அடுத்த மோசடியால் அதிர்ச்சி:இந்நிலையில், பல்கலைக்கு உட்பட்ட தனியார் கல்லுாரிகளுக்கு தொடர் இணைவிப்பு மற்றும் பாடத் திட்டங்களுக்கான அனுமதி வழங்கியதிலும் ரூ.பல லட்சம் மோசடி நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்லுாரிகளுக்கு தொடர் இணைவிப்பு மற்றும் பாடத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் பல்கலை டீன் அலுவலக ஊழியர்கள் சிலருக்கு இதில் தொடர்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.

கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் வழங்க கட்டண தொகையை சம்பந்தப்பட்ட கல்லுாரிகளில் இருந்து காசோலையாக மட்டுமே பெற வேண்டும் என்பது விதி. ஆனால், பல்வேறு கல்லுாரிகளில் இப்பிரிவில் உள்ள சிலர் ரொக்கமாக பெற்று ரூ.பல லட்சம் மோசடி செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட கல்லுாரிகள் இதுகுறித்து புகார் அளித்துள்ளன.

இந்த முறைகேடு தொடர்பாக அப்பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற

அதிகாரி மற்றும் கண்காணிப்பாளருக்கு விளக்கம் கேட்டு பல்கலை 'நோட்டீஸ்' அனுப்பிஉள்ளது.

பல்கலை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'முதல் கட்டமாக இரு கல்லுாரிகளின் புகாரின்படி முறையே ரூ.7.50 லட்சம் மற்றும் ரூ.1.50 லட்சம் என டீன் அலுவலகத்தில் முறைகேடு நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடக்கிறது,' என்றார்.



சபாஷ் விசாரணை குழு!

நேரடி மாணவர்கள் சேர்க்கை குறித்து ஓராண்டிற்கும் மேல் பிரச்னை நீடிக்கிறது. துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளதால் இதுகுறித்து விசாரிக்க மூன்று சிண்டிகேட் உறுப்பினர்கள் கொண்ட குழுவை மூன்று மாதங்களுக்கு முன் உயர்கல்வி செயலர் அபூர்வா நியமித்தார். விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில், மற்றொரு குழுவை அமைத்து விசாரிக்க அவர் உத்தரவிட்டார். அந்த குழு, ஆர்வமாக விசாரிக்க துவங்கிய சில நாட்களில் பல்வேறு முறைகேடு ஆவணங்களை கைப்பற்றி முக்கிய அதிகாரிகளுக்கு 'நோட்டீஸ்' அளித்தனர். இதே குழு தான் டீன் அலுவலகத்திலும் நடந்த மோசடி குறித்து விசாரித்து நோட்டீஸ் வழங்கியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...