சட்டசபை இன்று துவக்கம்ஊழியர்களுக்கு கூடுதல் நேரம் பணியாற்ற உத்தரவு

சட்டசபை கூட்டம் துவங்குவதால், தலைமைச் செயலக ஊழியர்கள், இன்று காலை, 9:30 மணிக்கு அலுவலகம் வர வேண்டும் என, துறை செயலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
'புதிய ஆட்சி அமைந்த பின், சட்டசபை கூட்டம், இன்று, கவர்னர் உரையுடன்
துவங்குகிறது. எனவே, இன்று முதல், தலைமைச் செயலக ஊழியர்கள், காலை, 9:30 மணிக்கு பணிக்கு வர வேண்டும்; மாலை, 6:30 வரை பணியில் இருக்க வேண்டும்' என, துறை செயலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
சட்டசபையில் இன்று காலை, 11:00 மணிக்கு, கவர்னர் ரோசய்யா உரையாற்றுகிறார். அவரது ஆங்கில உரையை, சபாநாயகர் தனபால் தமிழில் படிப்பார். அத்துடன், இன்றைய கூட்டம் நிறைவு பெறும். அதன்பின், அலுவல் ஆய்வு குழு கூடி, சபை எத்தனை நாள் நடைபெறும் என்பதை முடிவு செய்து அறிவிக்கும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...