ஐ.டி., ஊழியர்கள் பிரச்னைக்கு தீர்வு தொழிற்சங்கம் துவங்க வாய்ப்பு

ஐ.டி., நிறுவன ஊழியர் பிரச்னைகளையும், தொழிலாளர் நலத்துறையில் முறையிட்டு தீர்வு காண, தமிழக அரசு, வழி வகை செய்துள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், ஐ.டி., நிறுவனங்களின் தொழிற்சங்கங்களுக்கும் முறைப்படி அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.




விதிகள் திருத்தம்

தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், தங்கள் பிரச்னைகளுக்கு, அரசின் தொழிலாளர் நலத்துறையிடம் முறையிட்டு, தீர்வு காண முடியும்.

இதில், பல பிரச்னைகளுக்கு எளிதாக தீர்வு காண முடிகிறது. இதன்படி, தொழிற்சங்கங்களும் அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வருகின்றன.

ஆனால், ஐ.டி., நிறுவனங்கள், சாப்ட்வேர் நிறுவன தொழிலாளர்கள் பிரச்னைகளுக்கு, அரசின் தொழிலாளர் நலத்துறையை நாட முடியாத நிலை இருந்தது. இதனால், தொழிற்சங்கங்களும் அமைக்க முடியவில்லை.

இப்பிரச்னைக்காக, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கில், 'ஐ.டி., நிறுவன தொழிலாளர் பிரச்னைகளையும், தொழிலாளர் நலத்துறையில் தீர்வு காண வேண்டும்' என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி, ஐ.டி., நிறுவன ஊழியர்களின் பிரச்னைக்கு, தொழிலாளர் நலத்துறையில் தீர்வு காண, விதிகள் திருத்தப்பட்டு, அமல்படுத்தப்படுகிறது. இதுகுறித்து, தொழிலாளர்

நலத்துறை, புதிய ஜனநாயக தொழிலாளர் நலத்துறை அனுப்பிய கடிதத்தில், 'ஐ.டி., நிறுவன தொழிலாளர் பிரச்னைகளுக்கு, தொழிலாளர் நலத்துறையை அணுகி தீர்வு பெறலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஐ.டி., ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.



புதிய சகாப்தம்

இதுகுறித்து, தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'புதிய நடைமுறையால், ஐ.டி., தொழிலாளர் பிரச்னைகளுக்கு, எளிதாக தீர்வு காண முடியும்; தொழிற்சங்கங்கள் துவக்க முடியும். அதற்கு, தொழில் நிறுவனங்களுக்கு, அரசின் அங்கீகாரமும் கிடைக்கும். இது,

நிச்சயம் புதிய சகாப்தம் என்றே சொல்லாம். ஐ.டி., நிறுவன ஊழியர்களின் பணி பாதுகாப்புக்கும் வழிவகுக்கும்' என்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...