தென்மேற்கு பருவமழை நாளை துவங்குகிறது....!!

தமிழகத்தின் நீர் பிடிப்பு பகுதிகளுக்கு தண்ணீர் தரும், தென்மேற்கு பருவமழை, கேரளாவில் நாளை துவங்குகிறது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.


ஒவ்வொரு ஆண்டும், தென்மேற்கு பருவமழை ஜூன், 1ல் துவங்கி, செப்டம்பர் வரை பெய்யும். நடப்பு ஆண்டில், எட்டு நாட்கள் தாமதமாக நாளை துவங்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கை: தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கான அறிகுறி, தென்பட துவங்கி விட்டது. கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், பருவமழை நாளை துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.



இதனால், ஜூன், 10 வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரு சில இடங்களில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையில், அடுத்த, 48 மணி நேரத்துக்கு, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; மாலை அல்லது இரவு நேரத்தில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம். நேற்று காலை, 8:30 மணி வரையிலான, 24 மணி நேரத்தில், தஞ்சாவூரில் அதிகபட்சமாக, 8 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

'ஸ்கைமெட்' என்ற தனியார் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மே, 30 முதல், கேரளாவில் மழை பெய்யத் துவங்கினாலும், தென்மேற்கு பருவமழை துவங்கும் அளவுக்கு மழை பெய்யவில்லை. தற்போது,அரபிக்கடலில் நிலவும் சீதோஷ்ண நிலையை

கணிக்கும் போது, தென்மேற்கு பருவ மழை, நாளை துவங்க வாய்ப்பு

உள்ளது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...