பள்ளிக்கு வராமலே கையெழுத்து தலைமை ஆசிரியை 'சஸ்பெண்ட்

வேடசந்துார் அருகே அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வராமலே முன்கூட்டியே கையெழுத்திட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
குஜிலியம்பாறை ஒன்றியம் நாகுல்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு ஏழு மாணவர்கள் படிக்கின்றனர்.
இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக திண்டுக்கல்லை சேர்ந்த இந்திரா உள்ளார்.
இவர் வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே பள்ளிக்கு வருவதாகவும், மற்ற நாட்களில் பள்ளிக்கு வந்ததாக முன்கூட்டியே கையெழுத்திட்டு செல்வதாகவும் புகார் எழுந்தது. இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை மிக குறைந்துள்ளது. இதனால்
பள்ளியே மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.பொதுமக்கள் சார்பில் தொடக்க கல்வித்துறைக்கு புகார் மனுக்கள் அனுப்பப்பட்டன. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாண்டியராஜன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லாத நிலையில், அன்றைய தினமும், மறுநாளும் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டது தெரியவந்தது.
இதையடுத்து பள்ளிக்கு வராமலும், வந்ததாக முன்கூட்டியே கையெழுத்திட்டு சென்ற தலைமை ஆசிரியை இந்திராவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...