தனியார் பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் போராட்டம் வகுப்புகள் மீது கல் வீச்சு, கண்காணிப்பு கேமராக்கள் உடைப்பு...!

சென்னை, தனியார் பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் வகுப்பறை மீது கல் வீசப்பட்டது. கண்காணிப்பு கேமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டன.தனியார் பள்ளிசென்னை புரசைவாக்கத்தில் அரசு உதவி பெறும் சர் சிடி.முத்தையா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த தனியார் பள்ளியின்
நிர்வாகத்திற்கும் ஆசிரியர்களில் ஒரு பிரிவினருக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. நிர்வாகத்திற்கு எதிராக உள்ள ஆசிரியர்களில் 5 பேர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறி அதை கண்டித்து ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். மாணவர்கள் போராட்டம் அந்த ஆசிரியர்களுக்கு மாணவர்களின் ஒரு பகுதியினர் ஆதரவு தெரிவித்து அவர்களுடன் உட்கார்ந்தனர். நிர்வாக தரப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் ஆசிரியர்களுக்கும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கும் இடையே கை கலப்பு ஏற்பட்டது. அப்போது வகுப்புகள் மீது மாணவர்கள் கல் வீசி எறிந்தனர். அங்கு வைத்திருக்கும் பேனர்கள், போர்டுகளையும் அடித்து நொறுக்கினார்கள். மேலும் கண்காணிப்பு கேமராக்களையும் மாணவர்கள் பலர் அடித்தனர். போலீசார் குவிப்புஇப்படி போராட்டம் நடந்ததால் போலீசார் விரைந்து வந்து மாணவர்களை அமைதியாக கலைந்து செல்லும்படி செய்தனர். இதையொட்டி முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோர் நிர்வாகத்துடனும் ஆசிரியர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.போராட்டத்தையொட்டி பள்ளிக்கூடம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.வகுப்புகள் நொறுக்கப்பட்டது குறித்து வேப்பேரி போலீசில் பள்ளி தலைமை ஆசிரியர் புகார் தெரிவித்து உள்ளார்.பள்ளிக்கும் நேற்று விடுமுறை விடப்பட்டது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...