கல்வி கட்டண நிர்ணய குழுதலைவரை நியமிக்க கோரிக்கை...!

தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்யும் குழுவின் தலைவரை நியமிக்க வேண்டும்' என, தமிழ்நாடு மாணவர் - பெற்றோர் நலச்சங்கம் சார்பில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பெஞ்சமினிடம், மனு கொடுக்கப்பட்டு உள்ளது.

மனுவில் கூறியிருப்பதாவது:தனியார் பள்ளிகளுக்கு, கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யும் குழு தலைவர் பதவி, ஏப்., 1ம் தேதியில் இருந்து காலியாக உள்ளது. எனவே, குழு தலைவரை உடனடியாக நியமிக்க வேண்டும். தலைவர் நியமிக்கப்படும் வரை, பழைய கட்டணத்தை வசூலிக்க, தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிட வேண்டும்.ஏழை மாணவர்களுக்கு, 25 சதவீதம் ஒதுக்கீடு வழங்காத, பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளிகள், செலவுகள் அனைத்தையும், பெற்றோரிடம் இருந்து வசூலிப்பதால், அவற்றை சுயநிதி பள்ளிகள் என அழைக்காமல், பெற்றோர் சார்பு பள்ளிகள் என, அழைக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...