உதவி பேராசிரியர் தேர்வு முடிவு அண்ணா பல்கலை இழுத்தடிப்பு...!

அண்ணா பல்கலை உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவு, நான்கு மாதங்களாக வெளியிடப்படாததால் தேர்வர்கள் தவிப்பில் உள்ளனர்.இப்பல்கலை சார்பில் மெக்கானிக்கல், மின்னியல், மின்தொடர்பியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், கட்டடவியல்
துறைகளில் 25 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு ஜன., 24ல் நடந்தது. 'அன்று மாலையே முடிவு அறிவிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டது; ஆனால் வெளியிடப்படவில்லை. 'தேர்வு முடிவு பின்னர் அறிவிக்கப்படும்' பல்கலை நிர்வாகம் தெரிவித்தது. தி.மு.க., தலைவர் கருணாநிதி, 'அண்ணா பல்கலை உடனடி தேர்வின் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் ஊழல் மற்றும் குளறுபடி ஏற்பட்டுள்ளது' என கண்டனம் தெரிவித்தார். இதன் பிறகும் பல்கலை மவுனம் சாதிக்கிறது.'பணி கிடைக்குமா, கிடைக்காதா?' என தேர்வர்கள் தவிப்பில் உள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...