பி.எட்., கல்லூரிகளுக்கு பல்கலை கிடுக்கிப்பிடி:மாணவர் சேர்க்கை, விளம்பரம் வெளியிட தடை.

தமிழகத்தில், 690 கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகள் அனைத்தும், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அங்கீகாரத்துடன், தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில் இயங்குகின்றன. இந்த கல்லுாரிகளுக்கு பல்கலை சார்பில், ஆண்டு தோறும் இணைப்பு அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

கல்லுாரியின் உட்கட்டமைப்பு, ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் கல்வித்தகுதி அடிப்படை யில் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பாடப்பிரிவுகள் குறித்து இணைப்பு அங்கீகாரம் வழங்கப்படும். மாணவர்களை சேர்த்த பின் அதற்கு தனியாக, பல்கலையில் சான்றிதழ் பெற வேண்டும்.

இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரம் வழங்கும் பணி தற்போது துவங்கியுள்ளது. கல்லுாரிகளின் விவரங்களை, ஆசிரியர் கல்வியியல் பல்கலை சேகரித்து வருகிறது. இவற்றில், புதிதாக விண்ணப்பித்துள்ள பல கல்லுாரிகள், தற்போதே பி.எட்., - எம்.எட்., படிப்புகளில் மாணவர் சேர்க்கையை துவங்கியுள்ளன. மேலும் இதுதொடர்பாக விளம்பர அறிவிப்புகளும், கல்லுாரிகளால் வெளியிடப்படுகின்றன. கல்லுாரிகளின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை தடை விதித்துள்ளது.



இதுகுறித்து, ஆசிரியர் கல்வியியல் பல்கலையிலிருந்து கல்லுாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'பி.எட்., கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள், தற்போது தான் துவங்கி உள்ளன. புதிய கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு, புதிய கல்லுாரிகளுக்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. 'எனவே, அங்கீகாரம் பெறும் முன், எந்த கல்லுாரியும் மாணவர் சேர்க்கை நடத்தவோ, அது குறித்த விளம்பரம் வெளியிடவோ கூடாது. மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...