தவறாகப் பாடம் சொல்லி தன் தலையில் தானே மண் வாரிப் போட்டுக் கொண்ட குஜராத் அமைச்சர்!

குஜராத் மாநிலத்தில், பள்ளி ஒன்றில் ஆய்வுக்குச் சென்ற அமைச்சர் ஷங்கர் சௌத்ரி ஆங்கிலத்தில் யானைக்கு தவறான ஸ்பெல்லிங்கை எழுதி, சமூக வளைதலங்களில் இன்றைய கொமெடியனாகிவிட்டார்.
பாஜக அமைச்சராக சௌதரி, தீஸா
பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆய்வுக்குச் சென்ற போது, அங்கிருந்த கரும்பலகையில் ELEPHENT என்று எழுதி பாடம் நடத்தினார்.
இந்த புகைப்படமும், விடியோவும் சமூக தளங்களில் பரவ.. அப்புறம் என்ன சொல்லவா வேண்டும்..
யானைக்கு சரியான ஸ்பெல்லிங் தெரியாத அமைச்சர் என்ற ரீதியில் அவரை நெட்டிசன்கள் கிண்டலிடிக்கத் தொடங்கிவிட்டனர்.
இது குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் சௌதரி, இது கற்பித்தலில் ஒரு நெக்னிக்.


நான் தவறாக எழுதியதை மாணவர்கள் கண்டுபிடித்து சொல்கிறார்களா என்று பார்க்கவே அப்படி எழுதினேன் என்கிறார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...