குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை வெளியேற்றக் கூடாது ...!

தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தும் நோக்கத்தில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை வெளியேற்றக் கூடாது என்று தி.மலை முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.குமார் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி யில் அரசு நிதியுதவி பெற்ற சுப்ரமணி சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்9-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள் 40 பேருக்கு
மேற்கொண்டு படிப்பதற்கு பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து, பள்ளியை பெற்றோர்கள் நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர்.அப்போது அவர்களிடம் தலைமை ஆசிரியை மகேஸ்வரி, மிகவும் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களை மேற்கொண்டு படிப்பதற்கு எப்படி அனுமதிக்க முடியும் என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் அவர், தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தவே, படிக்காத மாணவர்களை மீண்டும் அதே வகுப்பில் படிக்க வைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.

தாயுடன் மாணவி தர்ணா

இதற்கிடையில், தண்டராம்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் சேர அனுமதிக்க மறுப்பதாக ஷபனா என்ற மாணவி, தனது தாயுடன் நேற்று தர்ணாவில் ஈடுபட்டார்.அப்போது அவர் கூறும்போது, “உடல்நிலை பாதிப்பால் பிளஸ் 2 படிக்கும்போது இடையிலேயே பள்ளியில் இருந்து விலகினேன். தற்போது, உடல்நிலை சீரடைந்துள்ளதால், பிளஸ் 2 வகுப்பில் சேர முயன்றேன். அதற்கு பள்ளி தலைமை ஆசிரியை அனுமதிக்கவில்லை. நேரடியாக தேர்வு எழுதுமாறு அறிவுரை வழங்குகிறார்” என்றார்.தலைமை ஆசிரியர் மாதவி கூறும்போது, “பிளஸ் 2 வகுப்பில் இடையில் நின்றவரை மீண்டும் சேர்ப்பது குறித்து உயர் அதிகாரி கள்தான் முடிவு செய்வார்கள்” என்றார்.

பந்தயத்தில் ஓடவிட வேண்டும்

அரசுப் பள்ளி மற்றும் நிதியுதவி பெறும் பள்ளியில் பிளஸ்2 வகுப் பில் மாணவர்கள் சேர்க்கைக்கு தேர்ச்சி சதவீதம் காரணம் என்பதை முன்வைத்து தடை விதிப்பது குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் பொன்குமார் கூறும்போது, “தேர்வு என்ற ஓட்டப் பந்தயத்தில் அனைத்து மாணவர்களையும்ஓட விட்டு, தேர்ச்சி பெற வைக்கவேண்டும் என்பது எனது இலக்கு. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் அடிப்படையில், 9-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை காரணம் காட்டி, மாணவர்களை சேர்ப்பதற்கு தடை விதிக்கக்கூடாது. குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை வெளியேற்ற கட்டாயப்படுத்தக் கூடாது. 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில் அனைத்து மாணவர்களையும் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

விசாரணைக்கு உத்தரவு

மேலும் அவர் கூறும்போது, “தண்டராம்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் படித்த மாணவி, உடல்நிலை பாதிக்கப்பட்டதால் இடையிலேயே நின்றுள்ளார். ஆனாலும், பொதுத்தேர்வு எழுதுபவர்களின் பெயர் பட்டியலில், அந்த மாணவியின் பெயர் இடம் பெற்றுள்ளதாக தலைமை ஆசிரியர் கூறுகிறார்.தேர்வு எழுதுபவர்களின் பட்டியலில் இடம்பெற்று தேர்வு எழுதவில்லை என்றால், அந்த மாணவி தேர்ச்சி பெறவில்லை என எடுத்துக்கொள்ளப்படும். அதனால் அவர், மீண்டும் பள்ளியில் படித்து தேர்வு எழுத முடியாது.நேரடியாகதான் தேர்வு எழுத முடியும். இது குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு நேர்முக உதவியாளருக்கு உத்தரவிட்டுள்ளேன். அவரது அறிக்கைக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...